Ajith: “AK 64-ல் அஜித்துடன் இணையும் வெற்றிமாறன்..?” சம்பவம் ரெடி... அப்டேட்டுக்கு வெயிட்டிங்!

சென்னை: அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து அஜித் தனது 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தத் தகவல் தீயாக பரவி வரும் நிலையில், அஜித்தின் ஏகே 64 பற்றிய அப்டேட்டும் வெளியாகியுள்ளது.

 Ajith: Ajith AK 64 will be directed by Vetrimaaran

அஜித்துடன் இணையும் வெற்றிமாறன்
துணிவைத் தொடர்ந்து அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கியது. பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம், ஆக்‌ஷன் ஜானரில் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல், அஜித்துடன் த்ரிஷா, ரெஜினா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அஜித் 175 கோடி ரூபாய் சம்பளம் வாங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன், சமீபத்தில் மார்க் ஆண்டனி படம் மூலம் மாஸ் காட்டினார். இந்தப் படத்தின் வெற்றியை பார்த்த அஜித், ஏகே 63 வாய்ப்பை ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

விடாமுயற்சி ஷூட்டிங் முடிந்த பின்னர் தான் ஏகே 63 அபிஸியல் அப்டேட் வெளியாகும் எனத் தெரிகிறது. ஆனால், அஜித் தனது 64வது படத்துக்கும் இப்போதே ரெடியாகிவிட்டாராம். அதன்படி, ஏகே 64 படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 Ajith: Ajith AK 64 will be directed by Vetrimaaran

விடுதலை 2ம் பாகத்தில் இயக்கி வரும் வெற்றிமாறன், அடுத்து சூர்யாவுடன் வாடிவாசல் படத்தில் இணையவுள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின்னர் வெற்றிமாறன் இயக்கும் படம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், திடீரென அஜித் - வெற்றிமாறன் கூட்டணி இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த அப்டேட் அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தாலும், இது உண்மை தானா என இதுவரை தெரியவில்லை. விடாமுயற்சி, ஏகே 63 படங்கள் முடிந்த பின்னரே ஏகே 64 பற்றியும் தெரியவரும் என சொல்லப்படுகிறது. ஆனாலும், அஜித் - வெற்றிமாறன் கூட்டணி இணையுமா என்பது கொஞ்சம் சந்தேகம் தான் என கோலிவுட் சினிமா ட்ராக்கர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X