Ajith: அஜித்தை நடு ரோட்டில் வைத்து பாலா செய்த சம்பவம்.. அப்போ அது உண்மையா..? ட்ரெண்டாகும் போட்டோ

சென்னை: அஜித் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். அஜர்பைஜானில் நடைபெற்று வரும் விடாமுயற்சி ஷூட்டிங் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அஜித்தை நடு ரோட்டில் வைத்து பாலா சம்பவம் செய்த போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

நடு ரோட்டில் எதிரும் புதிருமாக அஜித் - பாலா
விடாமுயற்சி திரைப்படம் கண்டிப்பாக அஜித்துக்கு மரண மாஸ் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இதனிடையே அஜித்தின் நான் கடவுள் பட போஸ்டர்கள் சில தினங்களுக்கு முன்னர் வைரலாகியிருந்தது.

 Ajith: Ajith and Bala Naan Kadavul shooting spot photo is trending

சினிமாவில் அறிமுகமான புதிதில் பல வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார் அஜித். அப்போது அஜித் தான் அடுத்த கமல்ஹாசன் என்றெல்லாம் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். அதில் முக்கியமான அஜித், இயக்குநர் பாலாவுடன் இணைந்தது தான். இயக்குநர் பாலா தனது முதல் படமான சேது மூலம் தமிழ்த் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். இதனால் பாலாவின் படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அதன்படி, பாலா இயக்கவிருந்த இரண்டாவது படமான நந்தாவில் முதலில் அஜித் தான் ஹீரோவாக கமிட்டானார். அஜித்தின் நந்தா என போஸ்டர்களும் வெளியாகி செம்ம மாஸ் காட்டியது. ஆனால், கடைசி நேரத்தில் அஜித் நந்தா படத்தில் இருந்து விலக, அவருக்குப் பதிலாக சூர்யா நடித்தார். அதுவரை நடிக்கத் தெரியாது என விமர்சிக்கப்பட்ட சூர்யாவின் கேரியரை நந்தா மாற்றி அமைத்தது. நந்தா போனாலும் பரவாயில்லை என மீண்டும் அஜித்துடன் பாலா இணைந்த படம் தான் நான் கடவுள்.

இந்தப் படத்தின் அறிவிப்பும் அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது. சாக்லெட் ஹீரோ, ஹேண்ட்ஸம், காதல் மன்னன், ஆசை நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அஜித், ஆக்ரோஷம் நிரம்பிய சாமியாராக மிரட்டியிருந்தார். போஸ்டரே நான் கடவுள் படத்துக்கு அதிக ஹைப் கொடுத்தது. அஜித்தின் வெரைட்டியான போஸ்டர்கள் வெளியாகி கோலிவுட்டையே மிரள வைத்தது.

ஆனால், திடீரென நான் கடவுள் மூவியில் இருந்தும் அஜித் விலகினார். அதன்பின் இந்தப் படம் ஆர்யா நடிப்பில் வெளியானது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நான் கடவுள் படத்திற்காக வெளியான அஜித்தின் போஸ்டர்கள் வைரலாகி இருந்தன. இதன் தொடர்ச்சியாக தற்போது அஜித்துடன் இயக்குநர் பாலா இருக்கும் போட்டோ வெளியாகியுள்ளது. அதில், அஜித்தின் தலை முடியை கொத்தாக பிடித்தபடி காட்சியை விளக்குகிறார் பாலா.

அஜித்தின் தலை முடியை நடு ரோட்டில் வைத்து பாலா பிடித்துள்ளதை பார்க்க, ஹீரோவை இயக்குநர் மிரட்டுவதை போல் தெரிகிறது. இதுதான் பாலாவின் ரியல் சம்பவம் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். பாலா தனது படங்கள் ரியாலிட்டியாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் எடுத்துக்கொள்வார். அதனால் நடிகர்களும் ஒரிஜினலாகவே அடி வாங்கியும் மிதி வாங்கியும் நடிப்பது வழக்கம்.

அதேபோல், எந்த ஹீரோவாக இருந்தாலும் தனது ஸ்டைலை மாற்றாமல் ஆர்டர் போட்டு நடிக்க வைப்பது தான் பாலாவின் வழக்கம். அதனால் தான் அஜித் நான் கடவுள் படத்தில் இருந்து விலகிவிட்டதாக அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X