Ajith: மகனுக்காக ஃபுட் பால் கிரவுண்டில் களமிறங்கிய அஜித்... ஷாலினி மட்டும் என்ன சும்மாவா..?

சென்னை: விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித், தற்போது சென்னையில் உள்ளார்.

அஜர்பைஜான் ஷெட்யூலை முடித்துவிட்ட அவர், அடுத்து துபாய் பறக்கவுள்ளார்.

 Ajith: Ajith and Shalini with their son Aadvik at the football ground

விடாமுயற்சி அடுத்தக்கட்ட ஷூட்டிங் துபாயில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தன் மகன் ஆத்விக் உடன் ஃபுட்பால் கிரவுண்டில் அஜித் களமிறங்கிய போட்டோ வைரலாகி வருகிறது.

ஃபுட் பால் பிளேயராக மாறிய அஜித்
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், ஆக்‌ஷன் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. அஜித்துடன் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர், ரெஜினா ஆகியோர் விடாமுயற்சியில் நடித்து வருகின்றனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், அஜர்பைஜான் ஷெட்யூலை முடித்துவிட்ட படக்குழு, அடுத்து துபாயில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாம். அதற்காக 5 நாட்கள் பிரேக் விடப்பட்டுள்ளதையடுத்து அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பினார் அஜித். அவர் சென்னை திரும்பிய வீடியோ இரு தினங்களுக்கு முன்னர் வைரலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை திரும்பிய அஜித் தற்போது தனது மகனுடன் சியர்ஸ் செய்து வருகிறார். நடிகராக மட்டும் இல்லாமல் கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கிச் சுடுதல், ட்ரோன் மேக்கிங் என வெரைட்டியாக மாஸ் காட்டி வருகிறார் அஜித். அதேபோல், அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினியும் சிறந்த பேட்மிண்டன் பிளேயர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களது வாரிசான ஆத்விக் மட்டும் சும்மா இருப்பாரா என்ன. சிறு வயதிலேயே ஃபுட் பால் விளையாட்டில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார் ஆத்விக். ஏற்கனவே ஆத்விக் அஜித் ஃபுட் பால் விளையாடும் போட்டோஸ் வைரலாகியுள்ளன. இந்நிலையில், தற்போது அவருடன் அஜித்தும் ஷாலினியும் களத்தில் இறங்கிய போட்டோ தீயாகப் பரவி வருகிறது.

ஆத்விக் ப்ளூ கலர் ஜெர்ஸியில் மாஸ் காட்ட, அவருடன் அஜித்தும் ஷாலினியும் போஸ் கொடுத்துள்ளனர். அதேபோல், இந்த போட்டோவில் ஆத்விக்கின் ஃபுட் பால் பயிற்சியாளரும் உடனிருக்கிறார். இந்த போட்டோவை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X