Ajith: “நீங்க பண்ணது மட்டும் சரியா..” நடிகை பாவனாவிடம் உடனடியாக மன்னிப்புக் கேட்ட அஜித்!

அஜர்பைஜான்: அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்கிறார். விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னை சந்திக்க வந்த ரசிகர்கள் முன்பு, பிரபல நடிகையிடம் அஜித் மன்னிப்புக் கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகையிடம் மன்னிப்புக் கேட்ட அஜித்
அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது தனது 62வது படமான விடாமுயற்சியில் நடித்து வருகிறார். துணிவு திரைப்படம் கொடுத்த சர்ப்ரைஸ் ஹிட்டால் செம்ம ஹேப்பியான அஜித், இப்போது மகிழ் திருமேனியுடன் பயணித்து வருகிறார். முதன்முறையாக இணைந்துள்ள இக்கூட்டணி ரசிகர்களுக்கு மெகா ஆக்‌ஷன் ட்ரீட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Ajith: Ajith apologized to actress Bhavana at the VidaaMuyarchi shooting spot

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் விடாமுயற்சி படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர், ரெஜினா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தரமான ஆக்‌ஷன் மூவியாக உருவாகும் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இதற்காக த்ரிஷாவை தவிர மற்றவர்கள் அனைவரும் அஜர்பைஜானில் தங்கியுள்ளனர்.

அஜித் அஜர்பைஜானில் இருப்பதை அறிந்து அவரை ஏராளமான ரசிகர்கள் சந்தித்து வருகின்றனர். அஜர்பைஜானுக்கு அருகில் இருக்கும் நாடுகளில் இருந்துகூட ரசிகர்கள் அஜித்தை பார்க்கச் சென்று வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தை பார்க்க சில ரசிகர்கள் சென்றுள்ளனர். அவர்களுடன் அஜித் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கும் வீடியோ வைரலானது. அப்போது பிரபல நடிகையான பாவனாவும் அஜித்தை அங்கு சந்தித்துள்ளார்.

2010ம் ஆண்டு வெளியான அசல் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் பாவனா. அப்போது முதலே அஜித்தும் பாவனாவும் நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர். தற்போது பெரியளவில் நடிப்பில் கவனம் செலுத்தாத பாவனா அஜித்தை விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்துள்ளார். பாவனாவை பார்த்ததும் எழுந்து நின்று வரவேற்கிறார் அஜித். அப்போது அஜித்திடம் "நீங்க லேட்டா வந்ததால நானும் கொஞ்சம் லேட்டா வந்தேன்" என பாவனா க்யூட்டாக வம்பிழுக்கிறார்.

அதாவது அஜித் சொன்ன நேரத்தில் வரவில்லை எனவும், அவர் தான் லேட்டாக வந்ததாகவும் ரசிகர்கள் முன்னிலையில் கலாய்த்தார். அதனை அஜித் ஜாலியாக எடுத்துக்கொண்டாலும், உடனடியாக எல்லோர் முன்பும் பாவனாவிடம் மன்னிப்புக் கேட்கிறார். இதனை பாவனாவும் க்யூட்டாக ரசிப்பதோடு அஜித்துடன் ஜாலியாக அரட்டை அடிக்கிறார். இந்த வீடியோ டிவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக தன்னை சந்திக்கச் சென்ற ரசிகர்களை, "ப்ளீஸ் உக்காருங்க" என அருகில் இருந்த சோபாவில் உட்கார வைத்து பேசினார் அஜித். தன்னை சந்திக்கச் சென்ற ரசிகர்களை அஜித் கூலாக டீல் செய்தது பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. அதேபோல் இப்போது நடிகை பாவனாவையும் அஜித் கூல் செய்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X