Ajith: விடாமுயற்சிக்காக கெட்டப்பை மாற்றிய அஜித்... ரசிகர்களை கலங்கடிக்கும் அல்டிமேட் வீடியோ!
துபாய்: அஜித் தற்போது தனது 62வது படமான விடாமுயற்சியில் கமிட்டாகியுள்ளார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார்.
விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்காத நிலையில், விரைவில் அதுபற்றிய அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்தப் படத்திற்காக அஜித் தனது கெட்டப்பை மாற்றியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கெட்டப்பை மாற்றிய அஜித்: கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜித், தற்போது துபாயில் உள்ளார். அவரது 62வது படமான விடாமுயற்சி படப்பிடிப்புக்காகவே துபாய் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. கடைசியாக அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியானது. இந்தாண்டு பொங்கல் தினத்தில் வெளியான துணிவு, விஜய்யின் வாரிசு படத்துக்கு செம்ம டஃப் கொடுத்தது.
துணிவு வெளியானதுமே அஜித்தின் ஏகே 62 ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விக்னேஷ் சிவன் செய்த குளறுபடிகளால், ஒருகட்டத்தில் அவரையே இந்தப் படத்தில் இருந்து தூக்கியது லைகா. அதன்பின்னர் ஏகே 62 இயக்குநராக மகிழ் திருமேனி கமிட்டானார். அவர் சொன்ன கதையை அஜித்தும் லைகா நிறுவனமும் ஓக்கே செய்த பின்னர் தான், திரைக்கதை உள்ளிட்ட ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தொடங்கின.

இதனால், மார்ச் மாதமே தொடங்கியிருக்க வேண்டிய ஏகே 62 படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. அதேநேரம் அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஏகே 62 டைட்டில் போஸ்டர் மட்டும் வெளியானது. அதன்படி விடாமுயற்சி என்ற டைட்டிலில் உருவாகவுள்ள ஏகே 62 படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இதுபற்றி அப்டேட் கேட்டு கேட்டு அஜித் ரசிகர்களும் நொந்துவிட்டனர். இறுதியாக சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் விடாமுயற்சி ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்றார் லைகா சுபாஸ்கரன்.
இதனையடுத்து எப்போது வேண்டுமானாலும் விடாமுயற்சி அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், அஜித் தொடர்ச்சியாக பைக் ட்ரிப்பில் பிஸியாக இருந்தார். இறுதியாக துபாய், ஓமன் நாடுகளில் பைக் டூர் சென்றிருந்த அஜித், தற்போது அங்கேயே விடாமுயற்சி படத்திற்காக ரெடியாகிவிட்டாராம். அதாவது விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட ஷூட்டிங், துபாயில் தொடங்கவுள்ளது.

அதற்கு ரெடியாகிவிட்ட அஜித், தனது கெட்டப், லுக் ஆகியவற்றை முழுமையாக மாற்றிவிட்டார். வழக்கம்போல சால்ட் & பெப்பர் ஹேர் ஸ்டைல் என்றாலும், அதிலும் சில வித்தியாசங்கள் இருப்பது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. லேசாக ட்ரிம் செய்யப்பட்ட மீசை, தாடியுடன் செம்ம ஸ்மார்ட்டாக இருக்கிறார் அஜித். இதுதான் விடாமுயற்சி படத்தில் அஜித்தின் லுக் என சொல்லப்படுகிறது. இந்த லுக்கில் அஜித் வலம் வரும் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











