Ajith: “வெத்து பந்தா காட்டல... ஸ்டேஜ்ல ஏறுனாலே இப்படி தான்..” அஜித் எப்படி இருந்துருக்காரு பாருங்க!

சென்னை: அஜித் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படம் ஆக்‌ஷன் ஜானரில் உருவாகிறது. தற்போதெல்லாம் தனது படங்களின் ப்ரோமோஷன் உட்பட பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை அஜித். ஆனால், அவர் ஒருநேரத்தில் எப்படி இருந்தார் என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அஜித்தோட இன்னொரு முகம் இது தான்
கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜித்துக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்ட பின்னரும் அஜித் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கின்றது. முக்கியமாக முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ஓபனிங்கில் அஜித்தின் படங்கள் மாஸ் காட்டி வருகின்றன. தற்போது அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

 Ajith: Ajith dancing with Raju Sundaram Throwback Video trending on Twitter

மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். அனிருத் விடாமுயற்சி படத்துக்கு இசையமைத்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இதனிடையே பயணங்களின் போது ரசிகர்களின் விருப்பத்துக்காக அவர்களுடன் செல்ஃபி எடுத்து வருகிறார்.

முன்பெல்லாம் தனது படங்களின் பூஜை நிகழ்ச்சி, ப்ரோமோஷன்ஸ், வெற்றி விழா என அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் அஜித்தை பார்க்கலாம். அதேபோல் தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் பேட்டியும் கொடுத்து வந்தார். ஆனால் ஒருகட்டத்தில் எல்லாவற்றுக்கும் நோ சொன்ன அஜித், தனது படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்வதில்லை. அதற்கெல்லாம் ஓகே சொல்லும் தயாரிப்பு நிறுவனத்துக்கு மட்டும் தான் கால்ஷீட் கொடுக்கிறார்.

இதனால் அஜித் ரொம்பவே ரிசர்ச்வ்ட் டைப் ஆளு என 2கே கிட்ஸ் ரசிகர்கள் மனகணக்குப் போட்டு வைத்துள்ளனர். ஆனால், அஜித் மேடைகளில் ஏறினாலே தாறுமாறாக சம்பவம் செய்பவர் என்பது பலருக்கும் தெரியாது. அதனை வெளிப்படுத்தும் விதமாக அஜித்தின் த்ரோபேக் வீடியோ ஒன்று டிவிட்டரில் வைரலாகி வருகிறது. அதாவது டான்ஸர்ஸ் யூனியனின் கலை நிகழ்ச்சியில் அஜித் கலந்துகொண்ட வீடியோ தான் அது.

அதில், அஜித் மேடையில் ஏறியதும் ரசிகர்கள் அவரை டான்ஸ் ஆட சொல்லி முழக்கம் போடுகின்றனர். அதனைக் கேட்டு சிரிக்கும் அஜித், வாழ்க்கைல உண்மையான விஷயங்கள பண்ணும் போது எப்பவுமே எதிர்ப்பு வரும். நீங்கள் கேட்டும் ஆடவில்லை என்பதற்காக மன்னிக்கவும் என அஜித் சொல்ல, அப்போது டான்ஸ் மாஸ்டர்ஸ் ராஜூ சுந்தரமும், அசோக் ராஜாவும் மேடைக்கு வருகின்றனர். அவர்கள் அஜித்தை ஆட வைக்க அவரும் செம்ம ஜாலியாக டான்ஸ் ஆடி வைப் கொடுத்துள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் நான் வெத்து பந்தா காட்ட விரும்பல, உண்மையான டன்ஸர்ஸ் முன்னாடி நான் ஆடுனா நல்லா இருக்காது என ஜாலியாக தன்னைத் தானே கலாய்க்கிறார். பொதுவாக கோலிவுட்டின் டாப் ஹீரோக்கள் மேடையில் ரசிகர்களை எண்டர்டெயின் பண்ணாமல் சீரியஸ்ஸாக பேசிவிட்டு இறங்கிவிடுவது வழக்கம். ஆனால், அஜித் அதையெல்லாம் செய்யாமல் செம்ம ஸ்போர்ட்டிவாக ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவார். இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X