Ajith: அக்காவுக்கு பிறந்தநாள் கேக் ஊட்டிவிட்ட ஆத்விக்... ட்ரெண்டாகும் அஜித் ஃபேமிலி போட்டோ!
துபாய்: அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது பிரேக் விடப்பட்டுள்ளது. இதனையடுத்து தனது குடும்பத்தினருடன் துபாய் சென்ற அஜித், அவரது மகள் அனோஷ்காவின் பிறந்தநாளையும் கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட அஜித் ஃபேமிலி போட்டோ வைரலாகி வருகிறது.
அஜித்தின் லேட்டஸ்ட் ஃபேமிலி போட்டோ
கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். ரோட் ட்ராவல் ஆக்ஷன் மூவியாக உருவாகி வரும் விடாமுயற்சி, அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இதுவரை இரண்டு கட்டங்களாக முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து தற்போது நியூ இயர் கொண்டாட்டத்துக்காக தனது குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார் அஜித். புத்தாண்டு கொண்டாட்டம் மட்டும் இல்லாமல், தனது மகள் அனோஸ்காவின் பிறந்தநாளையும் துபாயில் செம்ம ஜாலியாக கொண்டாடியுள்ளார் அஜித். அமர்க்களம் படத்தில் நடித்த போது அஜித், ஷாலினி இருவரும் காதலிக்கத் தொடங்கினர். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட அவர்களுக்கு அனோஸ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
இவர்களில் மகள் அனோஸ்கா நேற்று தனது 16வது பிறந்தநாளை கொண்டாடினார். துபாயில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழாவில் அஜித்தின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக தெரிகிறது. அப்போது அக்கா அனோஸ்காவிற்கு தம்பி ஆத்விக் பிறந்தநாள் கேக் ஊட்டிவிட, அவர்களது அருகில் அஜித்தும் ஷாலினியும் உள்ளனர். அஜித்தின் இந்த க்யூட்டான ஃபேமிலி போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக துபாயில் ஷாப்பிங் சென்ற அஜித்தும் ஷாலினியும் க்யூட்டாக எடுத்துக்கொண்ட போட்டோ ட்ரெண்டானது. அதேபோல், அஜித் தனது குடும்பத்தினருடன் சொகுசு கப்பலில் பயணித்த வீடியோவும் வைரலாகின. இந்த வரிசையில் தற்போது அஜித் மகள் அனோஸ்காவின் பிறந்தநாள் கொண்டாட்டமும் ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளது. இந்த போட்டோவிலும் அஜித் வழக்கம் போல ஒயிட் ஷார்ட் அணிந்தபடி, சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் மாஸ் காட்ட, ஷாலினி இளமையாக தோற்றமளிக்கிறார்.
புத்தாண்டு கொண்டாட்டமும் மகளின் பிறந்தநாளும் முடிந்துவிட்டதை அடுத்து, விரைவில் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளாராம் அஜித். த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஆரவ், ரெஜினா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் அஜித்துடன் நடித்து வருகின்றனர். இதனிடையே விடாமுயற்சி படத்தின் ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் நிறுவனமும், சாட்டிலைட் உரிமையை சன் டிவியும் வாங்கியுள்ளதாம். அதேபோல் ஆடியோ ரைட்ஸ்ஸை சோனி நிறுவனம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











