Ajith: AK 63... அஜித்துக்கு 150 கோடி ஆஃபர் கொடுத்த சன் பிக்சர்ஸ்... விஜய்க்கு அடுத்த ஸ்கெட்ச்!
சென்னை: அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்குமார்.
இன்னும் விடாமுயற்சி படப்பிடிப்பே தொடங்காத நிலையில், ஏகே 63 படத்துக்காக அஜித்துக்கு மிகப் பெரிய ஆஃபர் கிடைத்துள்ளது.

அதன்படி, அஜித்துக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்துள்ள மெகா ஆஃபர் கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது.
அஜித்துக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த மெகா ஆஃபர்: கோலிவுட்டின் டாப் ஹீரோவான அஜித், தற்போது தனது 62வது படத்தில் நடிக்கவுள்ளார். விடாமுயற்சி என டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்குகிறார், அனிருத் இசையமைக்கவுள்ளார். அதேநேரம் இதுவரை விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், விடாமுயற்சி ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என லைகா நிறுவனர் சுபாஸ்கரன் அப்டேட் கொடுத்திருந்தார். இந்நிலையில், அஜித்தின் 63வது படம் குறித்து அமர்க்களமான அப்டேட் ஒன்று வைரலாகி வருகிறது. அதன்படி அஜித்தின் 63வது படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் ரெடியாகிவிட்டதாம். இதற்காக அஜித்துக்கு மிகப் பெரிய ஆஃபர் கொடுத்துள்ள சன் பிக்சர்ஸ், ஏகே 63 படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.
சன் பிக்சர்ஸ் தயாரித்த ரஜினியின் ஜெயிலர் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் ருத்ரதாண்டவம் ஆடியது. இதனால், ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார்களை பரிசாக கொடுத்து அசத்தினார் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன். அதோடு ரஜினியின் தலைவர் 171 அப்டேட்டையும் அதிரடியாக வெளியிட்டார். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து தான் அஜித்தின் ஏகே 63 படத்தை தயாரிக்கவும் சன் பிக்சர்ஸ் பிளான் செய்துள்ளதாம். இந்தப் படத்திற்கான இயக்குநர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யாத சன் பிக்சர்ஸ், அஜித்துக்கு சம்பளமாக 150 கோடி ரூபாயை ஆஃபர் செய்துள்ளதாம். இதுவரை ரஜினி, விஜய், கமல்ஹாசன் ஆகியோர் மட்டுமே 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகின்றனர். அவர்களுக்கு நிகராக அஜித்துக்கும் 150 கோடி ரூபாய் ஆஃபர் கொடுத்துள்ளது சன் பிக்சர்ஸ்.
சன் பிக்சர்ஸின் இந்த ஆஃபரை அஜித்தும் ஓக்கே செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கிய பின்னரோ அல்லது ரிலீஸ் தேதி அறிவித்ததுமோ ஏகே 63 அப்டேட்டை வெளியிட சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளதாம். இதன் மூலம் விஜய்க்கு மறைமுகமாக நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளதா என நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். விஜய்யின் பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரித்தது.
இந்தப் படத்தின் தோல்வியால் தான், அடுத்தடுத்து ரஜினி, அஜித்துடன் கூட்டணி வைக்கிறதாம் சன் பிக்சர்ஸ். அதுமட்டும் இல்லாமல் விஜய்க்கே டஃப் கொடுக்கும் வகையில் அஜித்துக்கு 150 கோடி ரூபாய் ஆஃபர் கொடுத்துள்ளது கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











