Ajith: மங்காத்தா படத்திற்காக தட்டிக் கொடுத்த அஜித்... இப்போ வெங்கட் பிரபு மீது கோபம்... என்னாச்சு?

சென்னை: அஜித்தின் 50வது படமாக வெளியான மங்காத்தா, ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்த இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.

மங்காத்தா உருவாகும் முன்பு, ரசிகர்களின் ட்ரோலால் அச்சத்தில் இருந்த வெங்கட் பிரபுவுக்கு அஜித் நம்பிக்கை கொடுத்துள்ளார். ஆனால், தற்போது விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு மீது, அஜித் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Ajith: Ajith is angry with director Venkat Prabhu for Thalapathy 68

வெங்கட் பிரபு மீது கோபத்தில் இருக்கும் அஜித்?
அஜித்தின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா, அஜித்தின் 50வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அஜித், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா, அஞ்சலி, வைபவ், பிரேம்ஜி என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல், நெகட்டிவ் ரோல் என ஆன்டி ஹீரோவாக மாஸ் காட்டியிருந்தார் அஜித்.

ரசிகர்களுக்கு ஃபேன் பாய் சம்பவமாக அமைந்த மங்காத்தா, வெங்கட் பிரபுவுக்கும் செம்ம ரீச் கொடுத்திருந்தது. முன்னதாக மங்காத்தா படம் பற்றிய அப்டேட் வெளியாகியிருந்த போது, வெங்கட் பிரபுவை கடுமையாக ட்ரோல் செய்திருந்தனர் அஜித் ரசிகர்கள். கிரிக்கெட்டை வைத்து ஜாலியாக படம் எடுத்த வெங்கட் பிரபு, அஜித் போன்ற மாஸ் ஹீரோவை எப்படி இயக்கப் போகிறார் என்றெல்லாம் அப்போது ட்ரோல்கள் பறந்தன.

இதனால் டென்ஷனான வெங்கட் பிரபு, ஒருகட்டத்தில் நேராக அஜித்திடம் போய், மங்காத்தா படத்தை ட்ராப் செய்திடலாம் எனக் கூறியுள்ளார். இது உங்களுக்கு 50வது படம் என்பதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதனை என்னால் செய்ய முடியாது என ரசிகர்கள் நினைப்பதாகவும், அதனால் இது செட்டாகாது என்றும் புலம்பியுள்ளார். இதனைக் கேட்டு சிரித்த அஜித், “உங்களால் முடியும்” என ஒரே வார்த்தையில் வெங்கட் பிரபுவுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.

அதன்பின்னரே அஜித்தின் மங்காத்தா ஷூட்டிங் தொடங்கியதோடு, படமும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தின் ஒரு காட்சியில் விஜய்யின் பாடலை வைக்குமாறும் அஜித் தான் வெங்கட் பிரபுவுக்கு ஆர்டர் போட்டிருந்தாராம். அதேபோல் மங்காத்தா பார்த்த விஜய், இந்த கதையை என்னிடம் கூறியிருந்தால், அர்ஜுன் கேரக்டரில் நானே நடித்திருப்பேன் என ஒருமுறை பேசியிருந்தார்.

இதனையெல்லாம் வைத்து, விஜய் - அஜித் இணையும் படத்தை வெங்கட் பிரபு இயக்கலாம் என ஒரு தகவலும் வைரலானது. அதேபோல், தளபதி 68 அபிஸியல் அப்டேட் வெளியானதும், விஜய் - அஜித் நடிக்கும் பான் இந்தியா படத்தை எனது மகன் வெங்கட் பிரபு இயக்குவார் என கங்கை அமரன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த கருத்தை அஜித் விரும்பவில்லை எனத் தெரிகிறது.

இதனால் கொஞ்சம் கோபத்தில் இருந்த அஜித், தனது ஏகே 62 இயக்குநர் லிஸ்ட்டில் இருந்து வெங்கட் பிரபுவின் பெயரை நீக்கி விட்டாராம். விஜய் தனது நெருங்கிய நண்பராக இருந்தாலும், அவரது அனுமதி இல்லாமல் இருவரும் இணைந்து நடிப்பதாக கங்கை அமரன் பேட்டிக் கொடுத்தது தான் இந்த கோபத்திற்கு காரணம் என செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X