Ajith: “அஜித் இன்னும் ஆட்டத்துல இருக்கார்... அதனால தான் இந்த பேச்சே”: கொளுத்திப் போட்ட பிரபலம்!

சென்னை: கோலிவுட் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜித், தற்போது விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில், விரைவில் அதுபற்றிய அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது விஜய்யுடன் அஜித்தால் போட்டிப் போட முடியவில்லை என ரசிகர்களிடம் பேச்சு எழுந்தன.

அதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ள பிரபல சினிமா விமர்சகர், "அஜித் இன்னும் ஆட்டத்துல தான் இருக்கார்" என விளக்கம் கொடுத்துள்ளார்.

 Ajith: Ajith is the competition for Vijay... Film critic Cable Sankar explained

விஜய்க்குப் போட்டி அஜித் தான்: கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் விஜய்யும் அஜித்தும் மிக முக்கியமானவர்கள். இருவருமே ஒரே காலக்கட்டத்தில் தங்களது சினிமா கேரியரில் முன்னணி ஹீரோவாக வளர்ச்சி அடைந்தனர். ஆனால், சமீப காலங்களாக அஜித் படங்களில் நடிப்பதை விடவும், பைக் டூர் செல்வதில் கவனம் செலுத்தி வருகிறார். இன்னொரு பக்கம் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அதேநேரம், விஜய் அசுர வேகத்தில் படங்களில் நடித்து வருகிறார். இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக விஜய்யின் வாரிசு வெளியானது. அதனைத் தொடர்ந்து உடனடியாக லியோவில் நடித்து முடித்துவிட்டு, இப்போது தளபதி 68ல் பிஸியாகிவிட்டார். ஆனால், அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் இன்னும் தொடங்கவே இல்லை. இந்தப் படத்தின் அப்டேட்டே இன்னும் வெளியாகாத நிலையில், அஜித் தொடர்ச்சியாக பைக் டூரில் பிஸியாக இருக்கிறார்.

 Ajith: Ajith is the competition for Vijay... Film critic Cable Sankar explained

முன்பெல்லாம் விஜய் - அஜித் என்ற ஃபயரிங் மோடில் இருந்த கோலிவுட்டில், தற்போது விஜய் மட்டுமே மாஸ் காட்டி வருவதாக பேச்சுகள் அடிபட்டன. இந்நிலையில் இதுகுறித்து பிரபல சினிமா விமர்சகர் கேபிள் சங்கர் சமீபத்திய பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, கடந்த பொங்கல் ஸ்பெஷலாக வெளியான விஜய்யின் வாரிசு படத்தை விட, அஜித்தின் துணிவு நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படி இருக்கும் போது அஜித் எப்படி ஃபீல்டில் இல்லை என சொல்ல முடியும்.

அஜித் விடாமுயற்சி படத்தில் ஏற்கனவே கமிட்டாகிவிட்டார். அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், அதன் பிஸினஸ் பெரிய அளவில் இருக்கும். அதற்காக அஜித்தை ஆட்டத்தில் இல்லையென்று எப்படி சொல்லிவிட முடியும். விஜய்யை பற்றி பேசினாலே அங்கு, அஜித் குறித்தும் பேச வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. அஜித் இன்னும் ஃபீல்டில் இருப்பதால் தான் அவரைப் பற்றி பேச்சே வருகிறது எனக் கூறியுள்ளார்.

இந்த வீடியோவை ஷேர் செய்து வரும் ஏகே ரசிகர்கள், அஜித் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் ஷூட்டிங் வராமல் இருக்கட்டும். ஆனால், அவர் சொன்னபடி வந்துவிட்டால் எல்லா ஹீரோக்களையும் புலம்ப விட்டுவிடுவார் என வெறித்தனமாக கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் விரைவில் விடாமுயற்சி அப்டேட் வரும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X