Ajith: "படத்துக்கு பப்ளிசிட்டி தேவை... ஆனா நிறைய கஷ்டப்பட்டேன்... இதுதான் உண்மை...” அஜித் ஓபன்!

சென்னை: விஜய் நடித்த லியோ திரைப்படம், கடந்த மாதம் 19ம் தேதி ரிலீஸானது.

இந்தப் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என சொல்லப்படும் நிலையில், லியோ வெற்றி விழா நடைபெறுகிறது.

இதனிடையே தனது படங்களின் ப்ரொமோஷன், சக்சஸ் மீட்டில் ஏன் கலந்துகொள்வது கிடையாது என அஜித் மனம் திறந்துள்ளார்.

லியோ வெற்றிவிழா நேரத்தில் அஜித்தின் இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 Ajith: Ajith opens up about not attending in his film promotions

பப்ளிசிட்டிக்கு பஞ்ச் வைத்த அஜித்
தமிழ்த் திரையுலகில் ரசிகர் மன்றங்களே இல்லாமல் மாஸ் காட்டி வருபவர் அஜித் தான். கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவுடன் டாப் மோஸ்ட் ஹீரோவாக கெத்து காட்டி வருகிறார். இத்தனைக்கும் அவர் தனது படங்களின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள், ஆடியோ லான்ச், ட்ரெய்லர் ரிலீஸ் என எதிலும் கலந்துகொள்வதில்லை.

முக்கியமாக விருது வழங்கும் விழாக்கள் முதல் சினிமா நிகழ்ச்சிகள் வரை அனைத்துக்கும் நோ என்ட்ரி தான். இதுபற்றி அஜித் மீது சினிமா பிரபலங்கள், தயாரிப்பாளர்கள் உட்பட பலரும் விமர்சனம் வைப்பதுண்டு. ஆனாலும், ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கமாட்டேன் என்ற கண்டிஷனுடன் தான் அஜித் படங்களில் கமிட்டாகி வருகிறார். அதேநேரம் பொது இடங்களில் ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்வதில் எந்த மறுப்பும் சொல்வதில்லை.

அஜித் தனது படங்களின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் சுத்தமாக கலந்துகொள்வதே இல்லை. இதுபற்றி அவர் ஓபனாக பேசிய வீடியோவை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இன்று விஜய்யின் லியோ பட வெற்றி விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வரும் வீடியோவில், ரசிகர்களுக்காக தான் தனது பட ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என அவர் கூறியுள்ளார். அதாவது "சினிமாவில் இந்த இடத்தை பிடிக்க நிறையவே கஷ்டப்பட்டுள்ளேன்... அதெல்லாம் கொஞ்ச நஞ்சம் கிடையாது. ஒரு படத்துக்கு பப்ளிசிட்டியும் அவசியம் தான். ஆனால், அதையும் தாண்டி ஒரு வாழ்க்கை உள்ளது, ரசிகர்கள் தங்கள் நேரத்தை வீணாக்கக் கூடாது" என்றுள்ளார்.

 Ajith: Ajith opens up about not attending in his film promotions

மேலும், ரசிகர்கள் மீது தனக்கு எப்போதுமே தீவிரமான அன்பு உள்ளது. அதற்காக சினிமா ப்ரொமோஷன், ப்ரஸ் மீட், பேட்டி என அவர்களது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அந்தந்த வயதில் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பேசியுள்ளார். தனது வளர்ச்சிக்காக ரசிகர்களை பயன்படுத்திக்கொள்ளாத நடிகர் அஜித்தான் என, நெட்டிசன்கள் இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X