Ajith: அஜித்துடன் முதன்முறையாக இணையும் சன் பிக்சர்ஸ்... இயக்குநர் அவரே தான்... ஆனா சம்பவம் வேறு!
சென்னை: அஜித் தற்போது லைகா தயாரிக்கும் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கவுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜூலை முதல் வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட அஜித் ரெடியாகிவிட்டாராம்.
அதன்படி விரைவில் அஜித்தின் ஏகே 63 படம் குறித்து அபிஸியல் அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
அஜித்துடன் முதன்முறையாக இணையும் சன் பிக்சர்ஸ்:கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித், ஒருபக்கம் சினிமா, இன்னொரு பக்கம் பைக் டூர் என ஜாலியாக உலகம் சுற்றுகிறார். விரைவில் உலகம் முழுவதும் மிகப் பெரிய பைக் டூர் செல்ல அஜித் பிளான் போட்டுள்ளார். அதற்கு முன்பாக இரண்டு படங்களில் நடித்துவிட வேண்டும் என முடிவு செய்துள்ளாராம்.

ஏற்கனவே அஜித்தின் ஏகே 62 பட அப்டேட் வெளியாகிவிட்டது. அதன்படி லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்திற்கு விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவே இல்லை. முதலில் ஜூன் மாதம் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்பட்ட நிலையில், இப்போது ஜூலை முதல் வாரம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடமுயற்சி ஷூட்டிங் முடிந்ததும், தனது 63வது படத்தில் நடிக்கவுள்ளாராம் அஜித். பைக் டூர் சென்றுவிட்டு வந்த பின்னர் தான் ஏகே 63 படம் குறித்து தெரியவரும் என சொல்லப்பட்டது. ஆனால், இப்போது அதற்கு முன்பாகவே அபிஸியல் அப்டேட்டை வெளியிட அஜித் முடிவெடுத்துள்ளாராம். லியோ படப்பிடிப்பு முடியும் முன்னரே விஜய் தளபதி 68 அப்டேட்டை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அஜித்தின் ஏகே 63 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாம். இதுவரை அஜித்தின் படங்களை சன் பிக்சர்ஸ் தயாரித்தது கிடையாது. அதிகபட்சமாக அஜித்தின் மங்காத்தா படத்தின் விநியோக உரிமையை மட்டுமே வாங்கியிருந்தது. அஜித் தனது படங்களின் ப்ரோமோஷன்களில் கலந்துகொள்ளமாட்டார் என்பதால் சன் பிக்சர்ஸ் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்தது.
ஆனால், தற்போது அஜித்தின் ஏகே 63 படத்தை தயாரிக்க ரெடியாகிவிட்டதாம் சன் பிக்சர்ஸ். இதற்கு காரணமே சிறுத்தை சிவா தான் என சொல்லப்படுகிறது. அஜித்துக்கு வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளார் சிவா. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அண்ணாத்த படத்தையும் இயக்கியிருந்தார். தற்போது சூர்யாவின் கங்குவா படத்தை மிகப் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார்.
இதனால், சிறுத்தை சிவாவை நம்பி அஜித்துடன் முதன்முறையாக இணைகிறது சன் பிக்சர்ஸ். மேலும் இது கேங்ஸ்டர் ஜானரில் ஆக்ஷன் படமாக உருவாகும் எனவும் சொல்லப்படுகிறது. அஜித், சிறுத்தை சிவா, சன் பிக்சர்ஸ் என மிரட்டல் காம்போவில் உருவாகும் ஏகே 63 குறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











