Ajith: ரசிகர்களை கூல் செய்ய அஜித் முடிவு... ரீ-ரிலீஸாகும் சூப்பர் ஹிட் மூவி எதுன்னு தெரியுமா..?

சென்னை: அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா தயாரித்து வருகிறது. இந்நிலையில், அஜித் ரசிகர்களுக்காக அவரது சூப்பர் ஹிட் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ் வரிசையில் அல்டிமேட் ஸ்டார் அஜித்தும் ரீ-ரிலீஸ் கூட்டணியில் இணைந்துள்ளார்.

ரீ-ரிலீஸாகும் அஜித்தின் சூப்பர் ஹிட் மூவி: கோலிவுட்டின் அல்டிமேட் ஸ்டார் அஜித் ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான அஜித்தின் துணிவு சூப்பர் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக ஏகே 62 படத்தில் நடிக்கவிருந்தார் அஜித். ஆனால், கடைசி நேரத்தில் ஏகே 62 இயக்குநராக விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி கமிட்டானார்.

 Ajith: Ajiths Dheena movie will be re-released with digital technology

இதனால் ஏகே 62 என்ற விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்க தாமதமாகிவிட்டது. இல்லையென்றால் இந்த மூவி 2023ம் ஆண்டு இறுதிக்குள்ளாகவே ரிலீஸாகிருக்கும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் விடாமுயற்சி மே மாதம் அஜித் பிறந்தநாளில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து ரசிகர்களுக்கு ஹைப் கொடுக்கும் விதமாக அஜித்தின் சூப்பர் ஹிட் மூவியை ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

அஜித்தை ரசிகர்கள் எப்போது 'தல' என கொண்டாடுவது தான் வழக்கம். கோலிவுட்டில் 'தல' என்றால் அது அஜித் தான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அஜித் தான் தன்னை தல என அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு அன்புக் கட்டளை இட்டுள்ளார். அதனால் இப்போதெல்லாம் அஜித், அஜித் குமார் அல்லது ஏகே என்பதே ரசிகர்களிடம் ட்ரெண்டாகி வருகிறது. இருந்தாலும் சில நேரங்களில் அஜித்தை தல என்றே கொண்டாடி வருகின்றனர்.

இப்படி ரசிகர்களிடம் தல என அஜித் பிரபலமாக தீனா திரைப்படம் தான் முதல் காரணம். ஏஆர் முருகதாஸ் இயக்குநராக அறிமுகமான தீனா, அஜித்துக்கு ஃபேன் பாய் சம்பவமாக அமைந்தது. 2001ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான இந்தப் படம் தாறுமாறான ஹிட் அடித்தது. அஜித்துடன் சுரேஷ்கோபி, லைலா ஆகியோர் நடிக்க, யுவன் இசையமைத்திருந்தார். அமர்க்களம் படத்துக்குப் பின்னர் அஜித் ரவுடியாக நடித்து ஆக்‌ஷனில் மிரட்டியிருந்தார்.

ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் மூவியான தீனா தான் இப்போது ரீ-ரிலீஸாகவுள்ளதாம். விஜயம் சினி கம்பைன்ஸ் தயாரித்த தீனா படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எடிட் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாபா, முத்து படங்களும், உலகநாயகன் கமலின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான் படங்களும் ரீ-ரிலீஸாகின. அதேபோல், சூர்யா, தனுஷ் ஆகியோரது படங்களும் ரீ-ரிலீஸாகின.

அந்த வரிசையில் அஜித்தின் தீனா படத்தையும் ரீ-ரிலீஸ் செய்யவிருப்பது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தீனா அடுத்த மாதம் ரீ-ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X