Ajith: “அரசியலில் களமிறங்குகிறாரா அஜித்..?” இப்படியொரு போட்டோ ஷூட் யாருமே எதிர்பார்க்கலயே!
சென்னை: கோலிவுட்டின் உச்ச நடிகர்களில் ஒருவரான அஜித், தற்போது விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என லைகா சுபாஸ்கரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அரசியலில் களமிறங்கும் தோரணையுடன் அஜித் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.

அரசியலில் களமிறங்குகிறாரா அஜித்..?: அஜித்தின் 62வது படமாக உருவாகவுள்ளது விடாமுயற்சி. லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கவுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. அஜித்தின் பிறந்தநாளில் விடாமுயற்சி என்ற டைட்டிலை அறிவித்த படக்குழு, அதன்பின்னர் அடுத்தக்கட்ட அப்டேட் எதையும் வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் பொறுமை இழந்து காணப்பட்டனர்.
இந்நிலையில் விடாமுயற்சி ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என லைகா தரப்பில் இருந்தே அப்டேட் வெளியானது. சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட லைகா சுபாஸ்கரன், விடாமுயற்சி ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இந்தப் படம் தங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல் என்றும் கூறியிருந்தார். இதனால், சீக்கிரமே அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கெல்லாம் நடுவில் அவ்வப்போது அஜித்தின் புகைப்படங்கள் மட்டும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. பொதுஇடங்கள், விமான நிலையங்களில் தன்னை சந்திக்கும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார் அஜித். முன்பெல்லாம் மீடியா வெளிச்சமே படாமல் இருந்த அஜித், இப்போது ரொம்பவே மாறிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில் வெள்ளை வேஷ்டி சட்டையுடன் அரசியல்வாதிகள் தோற்றத்தில் உள்ள இருவருடன் அஜித் புகைப்படம் எடுத்துள்ளார். அஜித்தும் வெள்ளை சட்டை, கூலர்ஸ் அணிந்து செம்ம ஸ்டைலிஷாக காணப்படுகிறார். இந்த போட்டோவை ரசிகர்கள் வைரலாக்கி வரும் நிலையில், அஜித் அரசியலில் களமிறங்கப் போகிறாரா எனவும் கமெண்ட்ஸ்கள் பறந்து வருகின்றன. அரசியல் குறித்து வெளிப்படையாக எந்த கருத்தும் சொல்லாத அஜித், அரசியல்வாதிகளுடன் போட்டோ எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் அஜித் தொடர்ந்து படங்களில் நடித்தாலே போதும், சீக்கிரமே விடாமுயற்சி அப்டேட் கொடுங்க எனவும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். விஜய் விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது இந்த போட்டோவை வைத்துக்கொண்டு அஜித்தையும் விரட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











