Ajith: “இதுக்கு ஒரு முடிவே கிடையாதா..?” மீண்டும் பைக் ட்ரிப்... ரசிகர்களுக்கு டாடா காட்டிய அஜித்!
சென்னை: அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில், விடாமுயற்சி ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என லைகா தரப்பில் இருந்து சொல்லப்பட்டது.
ஆனால், அஜித் மீண்டும் பைக் டூர் சென்றுள்ள வீடியோ வெளியாகி, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

மீண்டும் பைக் ட்ரிப் சென்ற அஜித்: அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான துணிவு, பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் வாரிசு படத்தை ஓவர் டேக் செய்து மாஸ் காட்டியது. இதனால், அவரது 62வது படம் குறித்தும் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்கும் என சொல்லப்பட்டது.
ஆனால், ஏகே 62 ஸ்க்ரிப்ட்டில் விக்னேஷ் சிவன் சொதப்பியதால், அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி கமிட்டானார். இதனால் ஏகே 62 படப்பிடிப்பு சொன்னபடி ஆரம்பிக்கவில்லை. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏகே 62 டைட்டில் விடாமுயற்சி என லைகா அறிவித்தது. அதில் தான் இயக்குநர் மகிழ் திருமேனி என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இதனால் விடாமுயற்சி படப்பிடிப்பு உடனடியாக தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அஜித்தோ தொடர்ச்சியாக பைக்கில் நாடு நாடாக சுற்றி வந்தார். அஜித் பைக் ட்ரிப் செல்வதில் பிஸியாக இருப்பதால் தான் விடாமுயற்சி ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை என சொல்லப்பட்டது. அதேபோல், விடாமுயற்சி படத்திற்காக அஜித் தனது உடல் எடையை குறைத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.
இன்னொருபக்கம் அஜித் செல்லுமிடமெல்லாம் ரசிகர்கள் அவருடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொண்டனர். இதனால், அடிக்கடி அஜித்தின் போட்டோஸ் இணையத்தில் ட்ரெண்டாகி வந்தன. இந்நிலையில் சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் பேசிய லைகா சுபாஸ்கரன், விடாமுயற்சி ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்திருந்தார். எனவே விடாமுயற்சி ஷூட்டிங் இனிமேல் தாமதமாகாது என சொல்லப்பட்டது.

இந்நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இப்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அரபு நாடுகளில் ஒன்றான ஓமன் சென்றுள்ள அஜித், அங்கும் தனது BMW பைக்கில் ட்ரிப் அடித்து வருகிறார். அப்போது அந்நாட்டு ரசிகர் ஒருவர் அஜித்துக்கு "ஹேப்பி ஜார்னி அஜித் சார் என கை கொடுக்க", பதிலுக்கு அஜித்தும் அவரிடம் சியர்ஸ் அடித்து பைக்கில் ஸ்டைலாக கிளம்பிச் செல்கிறார்.
இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து வந்தாலும், விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்க வாய்ப்பே இல்லையா என ஏமாற்றத்துடன் கேட்டு வருகின்றனர். ஏற்கனவே விடாமுயற்சி படம் ட்ராப் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், லைகா சுபாஸ்கரனே அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் அஜித் மீண்டும் பைக் டூர் சென்றுள்ளது, ரசிகர்களையே டென்ஷனாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











