Ajith: “அடி பில்லா ரங்கா பாட்ஷாதான்..” ரெட்ரோ லுக்கில் மிரட்டும் அஜித்... வைப் ஆன ரசிகர்கள்!

சென்னை: அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தில் இருந்து இதுவரை அபிஸியல் அப்டேட்ஸ் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், அஜித்தின் புகைப்படங்கள் மட்டும் அடிக்கடி வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தற்போது வைரலாகி வரும் போட்டோவில் அஜித்தின் லுக் செம்ம வைப் கொடுத்துள்ளது.

ரெட்ரோ லுக்கில் மாஸ் காட்டும் அஜித்
அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் 62வது படமாக உருவாகும் இதனை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. விரைவில் சென்னை திரும்பவுள்ள விடாமுயற்சி டீம், அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இந்தியாவின் முக்கியமான சிட்டியில் நடத்த பிளான் செய்துள்ளதாம்.

 Ajith: Ajiths retro look photo is trending on Twitter

விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர், அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தை அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடையே விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அடிக்கடி அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

தன்னை சந்திக்க வரும் ரசிகர்களுடன் அஜித் எடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள போட்டோவில், அஜித்தின் லுக் தாறுமாறாக உள்ளது. வழக்கமாக சால்ட் & பெப்பர் லுக்கில் அசத்தும் அஜித், இந்தமுறை இன்னும் கெத்து காட்டியுள்ளார். அதாவது கோட், சூட் காஸ்ட்யூமில் கூலர்ஸ் அணிந்து போஸ் கொடுத்துள்ள அஜித், தலையில் ரெட்ரோ ஸ்டைல் தொப்பியும், கழுத்தில் எம்ஜிஆரை போல ஒரு துண்டும் சுற்றியுள்ளார்.

 Ajith: Ajiths retro look photo is trending on Twitter

அன்பே வா எம்ஜிஆரின் லேட்டஸ்ட் வெர்ஷன் போல அஜித் மாஸ் காட்டியது ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளது. விடாமுயற்சி ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட இந்தப் போட்டோ தற்போது டிவிட்டரையே கலக்கி வருகிறது. விடாமுயற்சி படத்தில் இருந்து அபிஸியல் அப்டேட்ஸ் தான் வரவில்லை. அஜித்தின் புகைப்படங்களையாவது கொண்டாடலாம் என ரசிகர்கள் இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்னர் அஜித்தின் புகைப்படங்கள் இப்படி வெளியாவதை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்திருந்தார்.

"தமிழ் சினிமாவில் பப்ளிசிட்டியை விரும்பாத ஒரே நடிகர். டெய்லி ஒரு ஃபோட்டோ மட்டும் ரிலீஸாகும். மத்தபடி சத்தியமா பப்ளிசிட்டி பிடிக்காது" என பதிவிட்டிருந்தார். ஆனாலும், தன்னம்பிக்கை நாயகன் அஜித் அடுத்தடுத்து ரசிகர்களுடன் போட்டோ எடுத்து அதனை ஷேர் செய்வது வருகிறார். இந்நிலையில், அஜித்தின் ஏகே 63 ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்கும் எனவும், இந்தப் படத்தின் பாடல் ரெக்கார்டிங்கை தேவிஸ்ரீ பிரசாத் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X