Ajith: ”அஜித் ரிஸ்க் எடுத்து மொத்த படக்குழுவையும் மீட்டு வந்தார்..” பிரபலம் சொன்ன ரகசியம்!

சென்னை: கோலிவுட்டின் டாப் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார் அஜித்.

ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்ட பின்னர் லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ள ஹீரோ என்றால் அது அஜித் தான்.

 Ajith: Ajiths Throwback story about high risk for his crew in Foreign

அதிகளவில் தோல்வி படங்களை கொடுத்த அஜித்தை அவரது ரசிகர்கள் ஒருபோதும் விட்டுக் கொடுத்ததே கிடையாது.

அந்தளவிற்கு அஜித்துக்கு ரசிகர்களிடம் வைப் இருப்பது ஏன் என்பதற்கான ஒரு சம்பவம் குறித்து பிரபலம் ஒருவர் மனம் திறந்துள்ளார்.

அஜித் எடுத்த ஹை-ரிஸ்க்

அமராவதி திரைப்படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் அஜித் குமார். ஆசை நாயகன், அல்டிமேட் ஸ்டார், தல, காதல் மன்னன் என ஏராளமான புனைப் பெயர்களில் அஜித்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களிடம் தனக்கு இருந்த செல்வாக்கை பார்த்து, ஒரே இரவில் மொத்த ரசிகர் மன்றங்களையும் கலைத்துவிட்டார்.

ஆனாலும், அஜித்துக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் இன்னும் வைப் குறையவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு படத்தின் மாஸ் ஓபனிங் ஒன்றே இதற்கு எடுத்துக்காட்டாகும். அதிகமான தோல்விப் படங்கள், சரியாக நடிக்கத் தெரியாது என்ற விமர்சனங்களையும் கடந்து கோலிவுட்டின் டாப் ஹீரோவாக மாஸ் காட்டி வருகிறார் அஜித்.

அதற்கெல்லாம் ஒரே காரணம், சினிமாவையும் தாண்டி அஜித்தின் ரியலான முகம் தான். எப்போதும் எந்த நிலையிலும் அனைவரையும் ஒரேமாதிரியாக பார்க்கும் உயர்ந்த பண்புதான் காரணம். எல்லோரையும் சமமாக மதிப்பதும், தனக்கு இருக்கும் செல்வாக்கை தலைக்கு மேல் ஏற்றாமல் ரொம்பவே சிம்பிளாக இருப்பதும் முக்கியமானது. படப்பிடிப்பிலும் தன்னுடன் நடிப்பவர்கள் முதல் லைட் மேன் வரை ஒருவரையும் விட்டுக் கொடுக்கமாட்டாராம்.

அஜித்தின் இந்த குணம் இப்போது என்றில்லை, அவர் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்பே இப்படி தான் இருப்பார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். சினிமாவில் தனது ஆரம்ப காலத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த அஜித், ஒருமுறை படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். அப்போது பட்ஜெட் காரணமாக படக்குழுவினர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பில் கட்டாமல், தயாரிப்பாளர் மட்டும் சென்னை திரும்பிவிட்டாராம்.

சென்னை வந்து பணம் ரெடி செய்த பின்னர் தனது படக்குழுவினரை மீட்டுவர வேண்டும் என்பதே தயாரிப்பாளரின் பிளான். ஆனால் அதுவரை படக்குழுவினரிடம் ஹோட்டல் நிர்வாகத்தினர் பிரச்சினை செய்துகொண்டே இருந்துள்ளனர். இதனால் டென்ஷனான அஜித், தனது சொந்த செலவில் ஹோட்டல் பில்லை செட்டில் செய்துவிட்டு படக்குழுவினரை மீட்டு வந்தாராம். இந்தச் சம்பவம் உன்னைத்தேடி படப்பிடிப்பில் நடந்தது என சொல்லப்படுகிறது.

இப்படி அஜித் செய்த உதவிகள் ஏராளம் என்றும், இதனால் அவர் பல கோடிகளை இழந்துள்ளதாகவும் வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X