Ajith: விடாமுயற்சி அப்டேட் கேட்ட ரசிகர்கள்... மிரள வைத்த அஜித் போஸ்டர்... இது சர்ப்ரைஸ் ட்ரீட்!
சென்னை: பொங்கல் ஸ்பெஷலாக வெளியான துணிவு, அஜித்துக்கு சூப்பரான கம்பேக் கொடுத்தது.
இதனையடுத்து லைகா தயாரிப்பில் அஜித் நடிக்கவுள்ள விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்காததால் ரசிகர்கள் அதன் அப்டேட் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அஜித்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
ட்ரெண்டாகும் அஜித்தின் விடாமுயற்சி போஸ்டர்: இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியானது. விஜய்யின் வாரிசுக்குப் போட்டியாக ரிலீஸான துணிவு, பாக்ஸ் ஆபிஸில் மரண மாஸ் காட்டியது. அஜித்துக்கு தரமான கம்பேக் கொடுத்த துணிவு, 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனால், அஜித்தின் 62வது படம் மீது அதிகம் எதிர்பார்ப்பு எழுந்தது.
லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இந்தப் படத்தை இயக்கவிருந்தார். அதன்பின்னர் விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி ஏகே 62 படத்தின் இயக்குநராக கமிட்டானார். அதன்படி, ஏகே 62 படத்துக்கு விடாமுயற்சி என டைட்டில் கன்ஃபார்ம் ஆனதுடன், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அஜித் தொடர்ச்சியாக பைக் டூர் சென்றுகொண்டிருப்பதால் இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை.
இதனிடையே ஆகஸ்ட் இறுதியில் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கிவிடும் எனவும், 18ம் தேதி பூஜை போடப்படுவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், விடாமுயற்சி பூஜை கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இருப்பினும் இந்த மாதத்திலேயே பூஜை போடப்பட்டு விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி படத்தின் அப்டேட் கேட்டு டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் அஜித்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. சால்ட் & பெப்பர் ஹேர் ஸ்டைலில் கறுப்பு கோட் சர்ட் அணிந்து செம்ம கெத்தாக போஸ் கொடுத்துள்ளார் அஜித். இந்த போஸ்டர் மகிழ் திருமேனி என்ற டிவிட்டர் அக்கவுண்டில் இருந்து ஷேர் செய்யப்பட்டுள்ளது. இதனால் இது அபிஸியல் அப்டேட் என அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
ஆனால், மகிழ் திருமேனி என்ற பெயரில் உருவான Fake ID எனவும், அஜித்தின் போஸ்டரும் ஃபேன்மேட் என்பது தெரியவந்துள்ளது. ஃபேன்மேட் போஸ்டராக இருந்தாலும் அஜித்தின் லுக் செம்ம மாஸ்ஸாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஏற்கனவே விடாமுயற்சி படத்துக்காக அஜித் தனது உடல் எடையை குறைத்து புதிய லுக்கிற்கு மாறி வருவதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











