Ajith: அடடே! அஜித் எப்போ WWE சாம்பியன் ஆனாரு... டிவிட்டரில் தூள் பறத்தும் AI போஸ்டர்ஸ்!!

சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.

 Ajith: Ajiths WWE Champion posters Generated by AI is trending

ஆனாலும் இதுவரை படக்குழு தரப்பில் இருந்து அபிஸியலாக அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், அஜித் WWE சாம்பியன் மோடில் வைப் கொடுக்கும் போஸ்டர்கள் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

WWE சாம்பியன் மோடில் அஜித்

 Ajith: Ajiths WWE Champion posters Generated by AI is trending

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம், விஜய்யின் வாரிசுடன் மோதியது. இந்தப் படம் தரமான ஓபனிங் உடன் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனால், அஜித்தின் 62வது படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கத் தொடங்கினர். லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த ஏகே 62, இறுதியாக இயக்குநர் மகிழ் திருமேனி கைகளுக்குச் சென்றது.

அதன்படி, ஏகே 62 'விடாமுயற்சி' என்ற டைட்டில் தற்போது உருவாகி வருகிறது. கடந்த மார்ச் மாதமே தொடங்கியிருக்க வேண்டிய விடாமுயற்சி ஷூட்டிங், சில தினங்களுக்கு முன்னர் தான் தொடங்கியது. இதற்காக அஜித், இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் அஜர்பைஜான் நாட்டில் முகாமிட்டுள்ளனர். இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

 Ajith: Ajiths WWE Champion posters Generated by AI is trending

விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கியது பற்றி இதுவரை அபிஸியலாக எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. ஆயுத பூஜை ஸ்பெஷலாக முக்கியமான அப்டேட் ஏதும் வெளியாகும் என அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அஜித்தின் சில போஸ்டர்கள் டிவிட்டரில் வைரலாகி வருகின்றன. இந்த போஸ்டர்கள் அனைத்துமே அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளன.

வெறித்தனமான ஃபிட்னஸ், சால்ட் & பெப்பர் ஹேர் ஸ்டைல் என WWE சாம்பியன் மோடில் கெத்து காட்டுகிறார் அஜித். விவேகம் படத்தில் அஜித்தின் லுக் எப்படி இருந்ததோ, அதேபோல் இந்த போஸ்டர்கள் டிசைன் செய்யப்பட்டுள்ளன. இவையனைத்துமே ஃபேன்மேட் போஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அஜித் ரசிகர்கள் இந்த போஸ்டர்களை வைரலாக்கி வருகின்றனர்.

 Ajith: Ajiths WWE Champion posters Generated by AI is trending

அஜித்தின் இந்த ஃபேன் மேட் போஸ்டர்கள் அனைத்தும் AI டெக்னாலஜியில் உருவாக்கப்பட்டுள்ளன. விடாமுயற்சி படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்கள், இப்போது அவர்களாகவே அஜித்தின் போஸ்டர்களை ட்ரெண்ட் செய்து வருவது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X