Ajith AK 63: அஜித்துடன் இணையும் டோலிவுட் மெகா டீம்... பரபரப்பாக வெளியான ஏகே 63 மாஸ் அப்டேட்ஸ்!

சென்னை: அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.

விடாமுயற்சியை தொடர்ந்து அஜித் தனது 63வது படத்தில் நடிக்கவுள்ளார்.

Ajith AK 63: Ajith AK 63 will be produced by Mythri Movie Makers

இந்தப் படத்தை அஜித்தின் வெறித்தனமான ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ஏகே 63 படத்தின் தயாரிப்பு நிறுவனம், டெக்னிக்கல் டீம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தின் ஏகே 63 அப்டேட்
அஜித்தின் துணிவு திரைப்படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து தற்போது லைகா தயாரிக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே அஜித்தின் 63வது படத்தின் இயக்குநர் குறித்து ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

அதன்படி, அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன், அவரை தனது படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக காத்திருக்கிறார். பெரிய ஹிட் கொடுத்தால் கண்டிப்பாக கால்ஷீட் தருவேன் என அஜித் கூறியிருந்ததாகவும், இதனையடுத்து மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது இக்கூட்டணி இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் விடாமுயற்சி ஷூட்டிங் முடிந்த உடனே ஏகே 63 படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அஜித்தின் ஏகே 63 படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் புஷ்பா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. அந்த வரிசையில் அஜித்தின் ஏகே 63 படத்தை தயாரிக்க க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளதாம்.

அதன் தொடர்ச்சியாக ஏகே 63 படத்தின் டெக்னிக்கல் டீம் குறித்த அப்டேட்டும் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏகே 63 படத்தின் இசையமைப்பாளருக்காக தேவி ஸ்ரீபிரசாத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பார் என சொல்லப்பட்டது. ஆனால், தற்போதைய தகவல்படி தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாந்த் தற்போது சூர்யாவின் கங்குவா படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

அதேபோல், ஏகே 63 படத்தின் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா கமிட்டாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் துணிவு படத்திற்கும் நிரவ்ஷா தான் ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விடாமுயற்சி ரிலீஸ் தேதி கன்ஃபார்ம் ஆனதும் ஏகே 63 படத்தின் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X