Ajith: AK 63 கூட்டணி இன்னும் கன்ஃபார்ம் ஆகலையாமே!! ரூட்டு மாறும் அஜித்... குழப்பத்தில் ரசிகர்கள்
சென்னை: அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே அஜித்தின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆனால், ஏகே 63 படத்தில் அஜித்துடன் ஆதிக் ரவிச்சந்திரன் இணைவது பற்றிய சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

கன்ஃபார்ம் ஆனதா ஏகே 63 கூட்டணி..?
கோலிவுட் அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறதாம். ஆனால், இதுபற்றி படக்குழு தரப்பில் இருந்து இதுவரை அபிஸியலாக அப்டேட் வெளியாகவில்லை. அதேநேரம், அஜித்தின் 63வது படம் பற்றி நேற்று முதல் தகவல்கள் பரவி வருகின்றன.
அதன்படி, அஜித்தின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அஜித்தின் வெறித்தனமான ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படம் மூலம் இயக்குநரானார். அதனைத் தொடர்ந்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா, மார்க் ஆண்டனி படங்களை இயக்கியுள்ளார். இவைகளில் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி, 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
விஷால், எஸ்ஜே சூர்யா இணைந்து நடித்த மார்க் ஆண்டனி படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். ஆரம்பத்தில் இருந்தே அஜித்துடன் இணைய வேண்டும் என்பதே ஆதிக் ரவிச்சந்திரனின் மிகப் பெரிய ஆசையாம். இதனையறிந்த அஜித், முதலில் ஒரு பெரிய ஹிட் கொடுத்துவிட்டு வந்தால் வாய்ப்புத் தருகிறேன் என ஆதிக் ரவிச்சந்திரனிடம் கூறியிருந்தாராம். அதன்பின்னர் தான் மார்க் ஆண்டனி படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன்.
இந்தப் படம் கடந்த மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதனால், விரைவில் அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதன்படி இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கவிருப்பதாகவும், ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அஜித்துக்கு 163 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் ஏகே 63 படம் குறித்து பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து வருவதாகவும், இன்னும் கன்ஃபார்ம் ஆகவில்லை எனவும் சொல்லப்படுகிறது. விடாமுயற்சி ஷூட்டிங் முடிந்த பின்னர் தான் இதுபற்றி அஜித் முடிவு செய்யவிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஏகே 63 பட விவகாரத்தில் அஜித் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











