Ajith: அஜித்தின் ஏகே 63 படத்துக்கு வந்த மெகா ஆஃபர்... ஓடிடி ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடியா..?

சென்னை: அஜித்தின் விடாமுயற்சி இந்தாண்டு மே மாதம் வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து விரைவில் ஏகே 63 படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தின் ஓடிடி உரிமை மிகப் பெரிய தொகைக்கு விலை போயுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தின் ஏகே 63 ஓடிடி ரைட்ஸ்: அஜித்தின் துணிவு திரைப்படம் கடந்தாண்டு பொங்கலுக்கு வெளியானது. அதன்பின்னர் ஏகே 62 படப்பிடிப்புக்காக காத்திருந்த அஜித், விக்னேஷ் சிவன் சொதப்பியதால் பைக் டூர் சென்றுவிட்டார். இதனையடுத்து தற்போது விடாமுயற்சி என்ற டைட்டில் ஏகே 62 உருவாகி வருகிறது. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் விடாமுயற்சி, மே மாதம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Ajith AK 63: Ajiths AK 63 OTT Rights Sold Out For Netflix

இதனிடையே விடாமுயற்சி ஓடிடி ரைட்ஸ்ஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியதாக இரு தினங்களுக்கு முன்னர் அபிஸியல் அப்டேட் வெளியானது. அதனைத் தொடர்ந்து அஜித்தின் ஏகே 63 படத்தின் ஓடிடி ரைட்ஸும் தற்போது விற்பனையாகியுள்ளதாம். அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைக்கலாம் என சொல்லப்படுகிறது.

ஆனால், அஜித்துடன் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் ஏகே 63 படத்தை இயக்குவதால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதுமட்டும் இல்லாமல் அஜித்துக்கு இது வித்தியாசமான ஜானர் படமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், ஏகே 63 படத்தில் காமெடிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆதிக் ரவிச்சந்திரன் முடிவு செய்துள்ளாராம்.

இதனால் ஏகே 63 படத்துக்கு அதிக ஹைப் ஏற்பட, அதன் ஓடிடி உரிமையையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்காக 120 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விலை பேசப்பட்டுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விடாமுயற்சி திரைப்படத்தின் ஓடிடி ரைட்ஸ் 100 கோடிக்கு விற்பனையாகியிருந்தது. அதைவிட கூடுதலாக விலை கொடுத்து ஏகே 63 ஓடிடி ரைட்ஸை வாங்கியுள்ளது நெட்பிளிக்ஸ்.

முன்னதாக விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ஓடிடி உரிமையை 125 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் வாங்கியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இப்போது அஜித்தின் ஏகே 63 ஓடிடி ரைட்ஸும் நெட்பிளிக்ஸ் வசமே சென்றுள்ளது. இதுமட்டும் இல்லாமல் இந்தியன் 2, தங்கலான், எஸ்கே 21, மஹாராஜா என முன்னணி ஹீரோக்களின் படங்களையும் பல கோடிகள் கொட்டிக் கொடுத்து கைப்பற்றியுள்ளது நெட்பிளிக்ஸ் நிறுவனம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X