Ajith AK 63: அஜித்துடன் மீண்டும் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை... ஏகே 63 ரிலீஸ் தேதியும் கன்ஃபார்ம்!

சென்னை: அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து அஜித் நடிக்கவுள்ள அவரது 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். ஏகே 63-ல் அஜித்தின் ஜோடி யார் என்பதோடு, படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தின் ஏகே 63 ரிலீஸ் தேதி: துணிவு வெற்றிக்குப் பின்னர் அஜித் நடிக்கும் படங்களுக்கு பெரிய ஹைப் ஏற்பட்டுள்ளது. தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித். லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் மூவியாக உருவாகிறது விடாமுயற்சி. அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றன.

 Ajith AK 63: AK 63 release next year for Pongal... Bollywood actress Tabu to pair up with Ajith

இதனிடையே அஜித்தின் ஏகே 63 படத்தின் அப்டேட்டும் கடந்த சில தினங்களாக ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றன. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது உறுதியாகியுள்ளது. இன்னும் படப்பிடிப்பே தொடங்காத நிலையில், ஏகே 63 ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டது. அதேபோல் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாந்தும் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில், ஏகே 63 ஷூட்டிங் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விடாமுயற்சி படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதால், ஏகே 63 டீம் ரெடியாகிவிட்டதாம். இந்தப் படத்தை குறுகிய காலத்தில் முடித்துவிடலாம் என படக்குழு பிளான் செய்துள்ளதாம். அதுமட்டும் இல்லாமல் 2025 பொங்கலுக்கு ஏகே 63 படத்தை ரிலீஸ் செய்யவும் முடிவு செய்துவிட்டார்களாம்.

இதனால் விடாமுயற்சி போல ஏகே 63 படப்பிடிப்பும் அடுத்தடுத்து அசுர வேகத்தில் நடைபெறும் என தெரிகிறது. முக்கியமாக இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக பாலிவுட்டில் இருந்து தபு கமிட்டாகியுள்ளாராம். ஏற்கனவே கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித், தபு ஜோடி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருந்தது. தற்போது அதே காம்போவில் ஏகே 63 படத்தை இயக்க ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளார்.

அஜித்தின் படம் என்பதால் தபுவும் உடனடியாக கால்ஷீட் கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. முன்னதாக துணிவு படத்தில் மல்லுவுட் சீனியர் நடிகை மஞ்சு வாரியர் அஜித்துடன் லீட் ரோலில் நடித்திருந்தார். விடாமுயற்சியில் த்ரிஷா நடிக்க, ஏகே 63 படத்தில் தபு கமிட்டாகியுள்ளார். அஜித் பெரும்பாலும் தனது வயதுக்கு ஏற்ற மாதிரி சீனியர் நடிகைகளுடன் மட்டுமே ஜோடி சேருவதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X