Ajith AK 63: அஜித்தின் ஏகே 63 வில்லன் ரேஸ்.. அடேங்கப்பா அந்த இரண்டு பேருமே நடிப்பில் அரக்கன் ஆச்சே!
சென்னை: அஜித் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித். ஏகே 63 என்ற டைட்டில் உருவாகும் இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கவுள்ளவர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏகே 63 வில்லன் ரேஸில் நடிப்பு அரக்கன்: அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடபெற்று வருகிறது. அஜித்துடன் அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ப்ரியா பவானி சங்கர், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விடாமுயற்சி ஷூட்டிங் முடிந்ததும் விரைவில் ஏகே 63 படத்தில் இணையவுள்ளார் அஜித்.

அதன்படி அஜித்தின் ஏகே 63 படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். அஜித்தின் வெறித்தனமான ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் முதன் முறையாக தனது ட்ரீம் ப்ராஜெக்ட் படத்தை இயக்கவுள்ளார். அஜித்தின் ஏகே 63 80களின் பின்னணியில் நடக்கும் கிராமத்து படமாக உருவாகவுள்ளதாம். மேலும், இதில் தபு அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம்.
அதேபோல் ஏகே 63 இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாந்த் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் ஏகே 63-ல் வில்லன் கேரக்டரில் யார் நடிக்கவுள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக எஸ்ஜே சூர்யா நடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுடன் லீடிங் கேரக்டரில் நடித்திருந்தார் எஸ்ஜே சூர்யா.
அதனைத் தொடர்ந்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரனின் ஏகே 63 படத்திலும் வில்லனாக மிரட்டவுள்ளதாக தெரிகிறது. அதேநேரம் அரவிந்த் சாமியிடமும் வில்லன் ரோலில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இன்னொரு பக்கம் தெலுங்கில் முன்னணி ஹீரோ ஒருவருடனும் வில்லன் ரோலுக்கு பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம். இதுகுறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்தின் வாலி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா. அஜித் கேரியரில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்த இந்தப் படம் எஸ்ஜே சூர்யாவுக்கும் சூப்பரான அடையாளம் கொடுத்தது. இந்நிலையில் முதன்முறையாக அஜித்துக்கு எஸ்ஜே சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











