Ajith AK 64: வெற்றிமாறன் அல்லது லோகேஷ்... அஜித்துடன் இணையப் போவது யார்..? பரபரக்கும் AK 64 அப்டேட்
சென்னை: அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள ஏகே 64 படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

அஜித்தின் ஏகே 64 இயக்குநர் யார்..?
துணிவு திரைப்படத்தின் வெற்றியால் வெறித்தனமான கம்பேக் கொடுத்தார் அஜித். இதனால் அவரது ஏகே 62 படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த இந்தப் படத்தை தற்போது மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். அதன்படி விடாமுயற்சி என்ற டைட்டிலில் லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து அஜித்தின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது உறுதியாகியுள்ளது. மார்க் ஆண்டனி படத்தில் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் காட்டிய ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்து அஜித்துக்கு ஒரு கதை சொல்லி அவரிடம் கால்ஷீட் வாங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் அஜித்தின் ஏகே 63 படத்தை வெற்றிமாறன் இயக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகின. அதாவது வாடிவாசல் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாகவும், அவருக்குப் பதிலாக அஜித் அதில் நடிக்கலாம் எனவும் சொல்லப்பட்டது. ஆனால், அது உண்மை இல்லை என்றும் வாடிவாசலில் சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி உறுதி தான் என்றும் சொல்லப்படுகிறது.
இதனிடையே அஜித்தின் 64வது படத்தை எல்ரெட் குமார் தயாரிக்க முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே இதுபற்றி அஜித்திடம் பேசி அவரது கால்ஷீட் வாங்கியதாகத் தெரிகிறது. அதேநேரம் வெற்றிமாறனின் விடுதலை படத்தையும் எல்ரெட் குமார் தான் தயாரித்து வருகிறார். இதனால், வெற்றிமாறனை வைத்தே அஜித்தின் ஏகே 64 படத்தை தயாரிக்கலாம் என எல்ரெட் குமார் பிளான் போட்டு வைத்துள்ளாராம்.
இதனால் ஏகே 64 படத்தில் அஜித் - வெற்றிமாறன் காம்போ இணையலாம் என சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் வெற்றிமாறன் இல்லையென்றால் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் ஏற்கனவே ரஜினியின் தலைவர் 171, கைதி 2, ரோலக்ஸ் என அடுத்தடுத்து படங்களை இயக்கவுள்ளார். இதனால் அஜித்துடன் ஏகே 64 படத்தில் இணைவாரா என்பது சந்தேகமே என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











