Ajith AK 64: உறுதியானதா அஜித் - வெற்றிமாறன் கூட்டணி... ஏகே 64ல் இணையும் முக்கியமான பிரபலம்..?
சென்னை: அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், அஜித்தின் ஏகே 64 படத்தில் வெற்றிமாறனுடன் இன்னொரு பிரபலமும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் - வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலம்
அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அசுர வேகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. அஜர்பைஜான் நாட்டில் நடைபெறும் இதில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டு வ்ருகிறது. விடாமுயற்சியை தொடர்ந்து அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது உறுதியாகிவிட்டது.

மார்க் ஆண்டனி திரைப்படம் மூலம் மாஸ் காட்டிய ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கால்ஷீட் கொடுத்துள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. இதனிடையே அஜித்தின் 64வது படம் குறித்தும் அடிக்கடி தகவல்கள் வெளியாகி வருகின்றன. வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாகவும், அவருக்குப் பதிலாக அஜித் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால், அது உண்மை இல்லை என்றும், வாடிவாசல் படத்தில் சூர்யா தான் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் வாடிவாசல் முடிந்ததும் அஜித்துடன் இணையவுள்ளாராம் வெற்றிமாறன். அஜித்தும் அதற்குள்ளாக ஏகே 63 படத்தை முடித்துவிடுவார் என சொல்லப்படுகிறது. இதனால் அஜித் - வெற்றிமாறன் கூட்டணி இணைவது உறுதி என்றே தெரிகிறது.
இந்தப் படத்தை எல்ரெட் குமார் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். வெற்றிமாறனின் விடுதலை படத்தை இதே நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இந்நிலையில், அஜித் - வெற்றிமாறன் இணையும் ஏகே 64 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்திருந்தார்.
ஆனால், அஜித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணி இதுவரை இணைந்தது கிடையாது. அதனை தீர்த்து வைக்கும் விதமாக அஜித்தின் ஏகே 64 படத்தில் சந்தோஷ் நாராயணன் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் - வெற்றிமாறன் காம்போவை ரசிகர்களே இதுவரை நினைத்துப் பார்த்தது கிடையாது. ஆனால், தற்போது இக்கூட்டணி இணைந்தால் அது தரமான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேநேரம் கடந்த சில வருடங்களாக ஆக்ஷன் ஜானரில் மட்டுமே நடித்து வரும் அஜித், வெற்றிமாறனுடன் இணைந்தால் பழையபடி நடிப்பிலும் அசரடிப்பார் என ரசிகர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











