அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்.. அஜித் ஷாலினியின் லேட்டஸ்ட் ஹாலிடே பிக்ஸ்!
சென்னை: நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது மனைவி ஷாலினி அஜித் இருவரும் சுற்றுலா சென்றுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் அஜித் ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களையே வெகுவாக கவர்ந்தது.
வங்கிகளில் நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்தும் விதமாக உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

அதிரடி காட்டும் அஜித்
வலிமை, துணிவு என அடுத்தடுத்து ஆக்ஷன் பிளாக்பஸ்டர் படங்களிலேயே நடித்து வருகிறார் நடிகர் அஜித். ஏகே 62 திரைப்படமும் பக்கவான ஆக்ஷன் படமாகவே இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தடம் படத்தை விட தரமான படத்தை அஜித்துக்கு கொடுக்க இயக்குநர் மகிழ் திருமேனி தீவிர ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.

அஜித் பிறந்தநாளில் அறிவிப்பு
ஏப்ரல் 28ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், லைகா நிறுவனம் ஒட்டுமொத்த கவனத்தையும் அந்த படத்தின் மேல் செலுத்தி வருகிறது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன் காரணமாக நடிகர் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதியே ஏகே 62 படத்தின் அறிவிப்பை வெளியிட்டு படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

மனைவி ஷாலினியுடன் டூர்
தனியாக தனது நண்பர்களுடன் பைக் டூர் சென்று வந்த நடிகர் அஜித் தற்போது தனது மனைவி ஷாலினி உடன் ஜாலி டூர் அடித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன. செம ரொமான்டிக் மூடில் நடிகர் அஜித் உள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

அதே அழகு
அமர்க்களம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த ஷாலினி இன்னமும் அதே அழகை எப்படித்தான் மெயின்டெய்ன் செய்து வருகிறார் என்றே தெரியவில்லை என ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர். குழந்தைகளுடன் நேரம் செலவழித்து வந்த நடிகை ஷாலினி வெளிநாடு சுற்றுலா முடிந்து வந்த தனது கணவருடன் நேரம் செலவழித்து இருக்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் வெயிட்டிங்
லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பதை அறிந்து கொள்ள அஜித் ரசிகர்கள் ரொம்பவே ஆவலாக காத்திருக்கின்றனர். பொன்னியின் செல்வன், லால் சலாம் உள்ளிட்ட லைகாவின் மற்ற அப்டேட்கள் வரும் போதெல்லாம் அஜித் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி விடுகின்றனர்.


Click it and Unblock the Notifications











