Ajith - Vetri Duraisamy: எத்தனை வருஷ நட்பு பாருங்க.. அஜித் வெற்றி துரைசாமி டூர் பிக்ஸ் டிரெண்டாகுது!
சென்னை: அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியும் நடிகர் அஜித்தும் பல வருடங்களாக நண்பர்களாக இருந்து வந்த நிலையில், அவர்கள் எடுத்துக் கொண்ட டூர் புகைப்படங்களும் ஒன்றாக இருக்கும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
நடிகர் அஜித் ஏகன் லுக்கில் இருக்கும் போதே இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட வீடியோ காட்சிகள் எல்லாம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

தனது நீண்ட நாள் உயிர் நண்பனின் மறைவால் வாடிய அஜித் குமார் வெற்றி துரைசாமியின் மறைவு செய்தி அறிந்ததும் அவரது வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய நிலையில், துரைசாமியின் வீட்டில் இருந்து அஜித் வெளியேறிய காட்சிகள் இணையத்தில் நேற்று அதிகம் பகிரப்பட்டன.
வெற்றி துரைசாமி மரணம்: இமயமலைக்கு சுற்றுலா செல்ல புறப்பட்டுச் சென்ற வெற்றி துரைசாமியின் உடல் சட்லஜ் நதியில் சில நாட்கள் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது உடல் நேற்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. நடிகர் அஜித்தின் நெருங்கிய நண்பராக வெற்றி துரைசாமி இருந்த நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பு இல்லாமல் சென்னையில் இருந்த நடிகர் அஜித் அவரது வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார். ஷாலினி அஜித்தும் உடன் சென்றிருந்த காட்சிகளும் வெளியாகின.
மினி விமானத்தை பறக்க விடும் வீடியோ: நடிகர் அஜித் பல ஆண்டுகளாகவே விமானங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பைக் ரேஸ், கார் ரேஸ் எல்லாம் தாண்டி மினி விமானங்களை ஏரோடிராமுக்கு சென்று பறக்கவிடுவார். அவருடன் வெற்றி துரைசாமியும் உடன் செல்வார். இருவரும் இணைந்து மினி விமானம் ஒன்றை பறக்க தயார் செய்யும் பழைய வீடியோ ஒன்றையும் ரசிகர்கள் தேடிப் பிடித்து தற்போது ஷேர் செய்து வருகின்றனர்.
அஜித்துடன் பைக் டூர்:நடிகர் அஜித் உலகம் முழுவதும் பைக்கில் சுற்றுலா செய்து வருகிறார். இந்தியா முழுக்க அவர் பைக் டூர் சென்ற போது அவருடன் வெற்றி துரைசாமியும் சென்றிருந்தார். இருவருக்கும் டிராவல் என்றால் ரொம்பவே பிடிக்கும். அப்பா சைதை துரைசாமி போக வேண்டாம் என தடுத்தும் கடைசியா ஒரு ட்ரிப் போயிட்டு வரேன்னு சொன்ன வெற்றி துரைசாமி இமயமலைக்கு சென்று வந்தது அவரது கடைசி ட்ரிப்பாகவே மாறி விட்டது.

டிரெண்டாகும் புகைப்படங்கள்: நடிகர் அஜித்துடன் பைக் ட்ரிப் சென்ற போது அஜித்தும் வெற்றி துரைசாமியும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ரசிகர்கள் தற்போது ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்து வருகின்றனர். வெற்றி துரைசாமியின் மறைவுக்கு அஜித் இரங்கல் தெரிவித்த நிலையில், அவரது ரசிகர்களும் வெற்றி துரைசாமியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏகே 63 அப்டேட் வருமா?: தனது நண்பர் வெற்றி துரைசாமி மறைவால் அஜித் வாடி நிற்கும் நிலையில் இன்று வெளியாகும் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்த ஏகே 63 படத்தின் அறிவிப்பு வருமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











