காலையிலே ஆரம்பித்த ஃபேன் வார்.. ட்விட்டரை தெறிக்கவிடும் அஜித், விஜய் ரசிகர்கள்!
பிகில் படத்தின் வசூல் 300 கோடி என்ற செய்திகள் வெளியானதில் இருந்து அஜித், விஜய் ரசிகர்களின் சண்டை ட்விட்டரில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விடுமுறை நாளான இன்று, காலை முதலே ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்களிடையே ஹேஷ்டேக் சண்டை பயங்கரமாக நடந்து வருகிறது.
விஜய் ரசிகர்கள் உருவாக்கிய #என்றும்_எங்கள்_விஜய் ஹேஷ்டேக் மற்றும் அஜித் ரசிகர்கள் உருவாக்கிய #TwitterEmperorsThalafans ஹேஷ்டேகும் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
தங்களுக்கு பிடித்த நடிகர் மீது விஸ்வாசம் காட்டுவதற்காக மற்றொரு நடிகரை பங்கமாக இரண்டு க்ரூப்களும் அசிங்கப்படுத்தி வருகின்றனர்.
இந்த சண்டை இருக்கும் வரை தான் தங்களுக்கு மார்க்கெட் இருக்கும் என்பதை அறிந்து அந்த நடிகர்களும், நேரடியாக இறங்கி சண்டையை தடுக்கவோ தவிர்க்கவோ முன் வருவதில்லை.
என்றும் எங்கள் விஜய்
ஞாயிற்றுக் கிழமையான இன்று அதிகாலை முதலே ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் என்றும் எங்கள் விஜய் ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து வருகின்றனர். சுமார் 3 லட்சத்திற்கும் மேலான ட்வீட்டுகள் அந்த ஹேஷ்டேகில் பகிரப்பட்டு, டிரெண்டாகி வருகிறது.
தல ரசிகர்கள்
ட்விட்டர் எம்பரர் தல ஃபேன்ஸ் என்ற ஹேஷ்டேகில் சுமார் 5 லட்சம் ட்வீட்டுகள் தொடுக்கப்பட்டு, சென்னை டிரெண்டிங்கில் இரண்டாம் இடத்தில் அந்த ஹேஷ்டேக் இடம்பிடித்துள்ளது.
என்ன சண்டை
தயாரிப்பாளர் பாஃப்டா தனஞ்செயன் சமீபத்தில் பிகில் படத்தின் தமிழ் நாட்டு ஷேர் குறித்து போட்டு கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸை அதில் வம்பிழுத்ததற்கு, கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் ட்வீட் மூலமே பதிலடி கொடுத்தது. அதனை பார்த்த அஜித் ரசிகர்கள் வரச்சொல்ல ஆப்பிஸ் இல்லையே, அழிவின் விழிம்பில் ஏஜிஎஸ் போன்ற ஹேஷ்டேகுகளை உருவாக்கி டிரெண்ட் செய்தனர். அதன் தொடர்ச்சியாகத்தான் இன்றும் சண்டை நடந்து வருகிறது.
ஐஐடியில் பிகில்
சென்னை ஐஐடி கல்லூரியில் பிகில் படம் நேற்று இரவு திரையிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக மிகப்பெரிய மாணவர்கள் கூட்டம் திரண்டுள்ள புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
ரசிகனுக்கு முதல் மரியாதை
தனக்கு என்ன என்று இல்லாமல், தன் மக்களுக்காக குரல், கொடுப்பவர் தளபதி விஜய் ...! எந்த மேடையிலும் தன் ரசிகனுக்கு, முதல் மரியாதை கொடுப்பவர், எங்கள் தளபதி ...!, எந்த நிலையிலும் மாறாத மனிதன் என இந்த நெட்டிசன் ட்வீட்டியுள்ளார்.
அடுத்த வருஷமும் நாங்கதான்
இந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் தான் ரியல் பிளாக்பஸ்டர் என்றும், அடுத்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள வலிமை படம் தான் வெல்லும் என்றும் இந்த ரசிகர் ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











