இங்க ஆரம்பம், அங்க மெர்சல்.. ட்விட்டர் ஹேஷ்டேக்கில் வரிந்துகட்டும் விஜய், அஜித் ரசிகர்கள்!
சென்னை: விஜய்யின் மெர்சல், அஜித்தின் ஆரம்பம் படங்களின் ஹேஷ்டேக்கை ரசிகர்கள் திடீரென டிரெண்டாகி வருகின்றனர்.
Recommended Video
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த படம், ஆரம்பம். இந்தப் படம் 2013ஆம் ஆண்டு வெளியானது.
நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா, மகேஷ் மஞ்சரேக்கர், கிஷோர், அக்ஷரா கவுடா உட்பட பலர் இதில் நடித்திருந்தனர்.

துபாய் காட்சிகள்
இந்தப் படம் ஹிட்டானது. படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஶ்ரீசத்ய சாய் மூவிஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்த இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் பேசப்பட்டன. துபாயில் எடுக்கப்பட்ட காட்சிகள் பிரமாண்டமாகவும் ஸ்டைலிஷாகவும் இருந்ததாக ரசிகர்கள் தெரித்தனர்.
ஜெயா டிவி
அஜித் நடித்த படங்களில் பிரமாண்ட ஓபனிங் கிடைத்த படம் இது என்று அப்போது கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படம் இன்று ஜெயா டிவியில் இப்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதையடுத்து #Arrambam என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, அஜித் ரசிகர்கள் அதை டிரெண்டாக்கி வருகின்றனர்.
அனுபவங்கள்
'வலிமை'யான ரசிகர்களே... இந்த படம் பற்றிய உங்கள் அனுபவங்களை இந்த ஹேஷ்டேக்கில் பதிவு செய்யுங்கள் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஏராளமான ரசிகர்கள், இந்தப் படம் பற்றிய தங்கள் அனுபவங்களை கூறி வருகின்றனர். பில்லா படத்துக்கு பிறகு அஜித் நடித்த ஸ்டைலிஷான படம் ஆரம்பம்தஅன் என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார்.
கொண்டாடப்பட்ட ஸ்டில்
சில ரசிகர்கள், அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளனர். கூடவே, 'ஆரம்பம்' படத்தின் பட்ஜெட் ரூ.60 கோடி என்றும் ஆனால் படம் 120 கோடி வசூலித்ததாகவும் ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார். படம் வெளிவந்த நேரத்தில் கொண்டாடப்பட்ட ஸ்டில் இதுதான் என்றும் ரசிகர்கள் அந்த ஸ்டில்லை பதிவு செய்துள்ளனர்.
டிரெண்டாகும் மெர்சல்
இது ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, விஜய் ரசிகர்கள் 'மெர்சல்' படத்தை மற்றொரு பக்கம் டிரெண்டாக்கி வருகின்றனர். ஜீ டிவியில் விஜய்யின் மெர்சல் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. சூர்யா டிவில் அவரின் தெறி, சன் டிவியில் திருப்பாச்சி படங்களும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதனால் விஜய் ரசிகர்களும் இந்த டிரெண்டிங் போட்டியில் களமிறங்கியுள்ளனர்.
ரூ.250 கோடி
வழக்கமாக அஜித் ரசிகர்கள் ஒரு விஷயத்தை டிரெண்டாக்கினால், விஜய் ரசிகர்கள் அதற்கு போட்டியாக மற்றொரு விஷயத்தை டிரெண்டாக்குவது வழக்கம். அதன்படி இப்போது #Mersal ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். ரூ.250 கோடியை முதன்முதலில் வசூலித்த, நடிகர் விஜய் படம் மெர்சல் என்று ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











