Don't Miss!
- News
"சலங்கை ஒலி" இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்.. சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு பற்ற வைத்த நெருப்பு.. சோஷியல் மீடியாவே கொதிக்குது.. யாரு நம்பர் 1?
சென்னை: நடிகர் விஜய் தான் தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் ஸ்டார் என வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பற்ற வைத்த நெருப்பு சோஷியல் மீடியாவையே கொந்தளிக்கச் செய்துள்ளது.
விஜய்யின் வாரிசு படத்தை தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மூலம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார் தயாரிப்பாளர் தில் ராஜு.
கார்த்தியின் தோழா, மகேஷ் பாபுவின் மகரிஷி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் வம்சி பைடிபைலி இந்த படத்தை இயக்கி உள்ளார்.
அப்படியெல்லாம்
போஸ்டர்
அடிக்காதீங்க..
கெட்ட
வார்த்தை
பேசாதீங்க..
ரசிகர்களுக்கு
விஜய்
அன்புக்
கட்டளை!

அவதார் 2வை முந்தி
டோலிவுட் மீடியா ஒன்றுக்கு வாரிசு படத்தின் தயாரிப்பாளர் அளித்த மீடியா தான் இப்போதைய ஹாட் டிரெண்டிங் டாப்பிக்காக மாறி உள்ளது. இன்று வெளியான அவதார் 2 படத்தின் ஹாஷ்டேக்கையே இரண்டாம் இடத்துக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது. விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இருவரும் அந்த பேட்டியைத் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் பெரும் சண்டையே போட்டு வருகின்றனர்.

தில் ராஜு பேட்டி
தயாரிப்பாளர் தில் ராஜு அளித்த பேட்டியில், வாரிசு படத்தின் நடிகர் விஜய் தான் தமிழ்நாட்டில் நம்பர் ஒன் நடிகர் என்றும், அவருக்கு குறைந்த எண்ணிக்கையிலான தியேட்டர்கள் ஒதுக்குவது சரியில்லை. அதிகளவிலான தியேட்டர்கள் வாரிசு படத்துக்கு கிடைக்க வேண்டும். இது பிசினஸ்.. இது தொடர்பாக உதயநிதியிடம் நேரடியாக பேசப் போகிறேன் எனக் கூறியுள்ளார்.

டென்ஷனான அஜித் ரசிகர்கள்
அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே யாரு நம்பர் ஒன் நடிகர் என்கிற போட்டி நிலவி வரும் நிலையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு இப்படி பேசியிருப்பது சரியில்லை என்றும் அஜித் தான் நம்பர் ஒன் நடிகர் என அஜித் ரசிகர்கள் ஏகப்பட்ட ட்ரோல் மீம்களை போட்டு வருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் கேள்வி
விஜய் தான் நம்பர் ஒன் நடிகர் என்றால் அப்போ ரஜினிகாந்த், அஜித், கமல் எல்லாம் எத்தனையாவது இடத்தில் உள்ளனர் என ப்ளூ சட்டை மாறனும் தனது பங்குக்கு எரிகிற கொல்லியில் நல்லாவே எண்ணெய் ஊற்றி உள்ளார். சோஷியல் மீடியா முழுவதுமே தில் ராஜு பற்ற வைத்த தீ பற்றி எரிகிறது.

யாரு நம்பர் 1
வாரிசு படத் தயாரிப்பாளர் தில் ராஜு பேசிய பேட்டி தீயாக பரவி வரும் நிலையில், இது தமிழ்நாடு தல நாடு என அஜித் ரசிகர்கள் நடிகர் அஜித் தான் நம்பர் ஒன் என டிரெண்ட் செய்து வருகின்றனர். ரஜினிகாந்த் ரசிகர்கள் அங்க என்ன சத்தம் எனக் கேட்க சண்டை பெரிதாகி வருகிறது. பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி நம்பர் ஒன் தேர்வு செய்வதா? நடிப்பை வைத்து நம்பர் ஒன் தேர்வு செய்வதா? என பெரிய விவாதமே நடைபெற்று வருகிறது.