ட்ரென்ட்டாகும் விநாயகர் சதுர்த்தி.. போட்டி போட்டு வாழ்த்து சொல்லும் அஜித், விஜய் ரசிகர்கள்!
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர்கள் அஜித் மற்றும் விஜயின் ரசிகர்கள் போட்டிபோட்டுக்கொண்டு சமூக வலைதளங்களில் வாழ்த்து கூறி வருகின்றனர்.
வழக்கமாக போட்டி போட்டுக்கொண்டு விஜய் மற்றும் அஜித் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ட்ரென்ட் ஆக்குவார்கள். இதனால் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் சண்டை நடக்கும்.
இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது. இதில் அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களின் தலைவர்களின் போட்டோக்களை பதிவிட்டு வாழ்த்து கூறி வருகின்றனர்.
அஜித் ரசிகர்
ஹேப்பி பர்த்டே தலைவா என்று கூறுகிறார் நடிகர் அஜித்தின் இந்த ரசிகர்.
அஜித் போட்டோ
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் என்று அஜித் விநாயகரை வணங்கும் இந்த போட்டோவை போட்டு கூறுகிறார் இந்த ரசிகர்.
விஜய் ரசிகர்
ஹேப்பி விநாயகர் சதுர்த்தி என்று விஜயின் போட்டோவை போட்டு வாழ்த்து கூறுகிறார் இந்த ரசிகர்.
தனுஷ் ரசிகர்
எல்லோருக்கும் விநாயகர் சதுர்த்தி எல்லோரும் உங்களின் குறிக்கோளை அடைய கடினமாக உழையுங்கள் என்று கூறுகிறார் நடிகர் தனுஷின் இந்த ரசிகர்.
நடிகர் விஜய்
அனைவருக்கும் இனிய #விநாயகர் சதுர்த்தி நல் வா்த்துக்கள் ஜெய் கணேஷா என்று கூறுகிறார் விஜயின் இந்த ரசிகர்.
ஆசை மகன் அஜித்
ஈசன் பெற்ற ஆசை மகனே என்று அஜித்தின் போட்டோவை பதிவிட்டிருக்கிறார் அஜித்தின் இந்த ரசிகர்.
வடிவேலு ரசிகர்
அப்பனே விநாயகா உன்னை கரைக்கிற இந்த நாளில்
பெண்ணுக மனசும் கரைந்து நம்மலை காதலிக்கனும் கல்யாணம் செய்யனும் அதுக்கு நீதான் துணை இருக்கனும்!! என்று வேண்டி பதிவிட்டிருக்கிறார் இந்த வடிவேலு ரசிகர்.
விநாயகர் ரசிகர்
அப்பனே பிள்ளையாரப்பா என்ன கட்டிக்க போறவங்களுக்கு மீன் குழம்பு நல்லா வைக்க தெரியணும்.. நீங்க தான் ஒரு நல்ல வழி காட்டணும் என்று கூறுகிறார் இந்த விநாயகர் ரசிகர்.


Click it and Unblock the Notifications











