twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தல தளபதி பற்றி பொக்கிஷமான நினைவுகளை கூறும் பாண்டு

    |

    சென்னை : எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி - என்று தன் முகத்தை அஷ்டகோணத்தில் மாற்றியவர் நடிகர் பாண்டு.

    வித்யாசமான உச்சரிப்பு, முகபாவனை என தனக்கென ஒரு தனி ஸ்டைல் கொண்டு
    மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் பாண்டு. இவர் முன்னாள்
    நகைச்சுவை நடிகரான இடிச்சப்புடி செல்வராஜ் அவர்களின் சகோதரர் என்று பலரும் சினிமா துறையில் சொல்லுவார்கள். .

    Ajith and vijay movies are my all time favorite experience with them -says p.paandu.
    நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பாண்டு கடந்த 32 ஆண்டுகளாக பல
    கதாநாயகர்களுடன் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பாண்டுரங்கன் என்ற
    அவர் பெயரை பி. பாண்டு என்று வெளிநாடுகளில் படிக்கச் சென்ற போது தானாகவே
    சுருக்கி கொண்டவர். டையலாக் டெலிவரி தான் அவருடைய பிளஸ் பாயிண்ட். அவரின்
    டையலாக்கை ஒன்ஸ் மோர் கேட்பவர்கள் பட்டியலில் ரசிகர்கள் மட்டும் அல்ல
    திரையுலகத்தினரும் உள்ளனர். நாட்டாமை படத்தில் இவருடைய காஸ்ட்யூம் கெட்டப் யாராலும் மறக்கவே முடியாது.

    நடிகர் எம்.ஜி.ஆர் அவர்களின் செல்ல தம்பியாக வளர்ந்தவர். நடிப்பு மீது
    பெரிய ஆர்வம் இல்லாதவர். இளைய திலகம் பிரபுவின் கட்டாயத்தால் தான் நடிக்க
    வந்தவர். நகைச்சுவை மூலம் நமக்கு பிரச்சயமில்லாத ஒருவரை சிரிக்கவைப்பது
    என்பது மிக பெரிய வரம். ஆகையால் மிகுந்த தயக்கத்துடன் தான் நடிக்க
    வந்தார். சிவச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் பிரபு நடித்த "என் உயிர்
    கண்ணம்மா" தான் பாண்டு நடித்த முதல் படம்.

    Ajith and vijay movies are my all time favorite experience with them -says p.paandu.

    நடிகர் பாண்டு அவர்கள் நடிப்பில் மட்டும் அல்ல திறமையான ஓவியரும் கூட.
    தனது குடும்பத்திலேயே ஓவியம் மீது மிகுந்த ஆர்வம் உடையவர் இவர் மட்டுமே.
    இவர் ஒரு பிறவி கலைஞர். வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று படித்து
    டாக்ட்ரேட் பட்டம் வாங்கியவர். பல நிறுவனங்களுக்கு அடையாள சின்னங்களை
    வடிவமைத்தவர். அது மட்டுமல்ல - அதிமுக கட்சியின் இரட்டை இல்லை சின்னம், சன் டிவி யின் லோகோ டிசைனிங் , தமிழ்நாடு டூரிசம் இன்று வரை பயன் படுத்தும் குடை சிம்பல்
    மற்றும் தமிழ்நாடு போக்குவரத்துக்கு கழகத்தின் சின்னங்களும் கூட
    பாண்டுவால் தான் வடிவமைக்கப்பட்டது என்ற செய்தியை அவரே பல மேடைகளில் சொல்லி இருக்கிறார்.

    படங்களில் நடிப்பதால் அவருடைய தொழிலுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு
    விடும் என்ற தயக்கம் அவருக்கு இருந்தது இருப்பினும் நடிகர் பாண்டு தனது
    குடும்ப தொழிலான துணி வியாபாரத்தை ஒரு புறமும் நடிப்பை மறு புறமும்
    சிறிதளவும் குழப்பி கொள்ளாமல் இன்று வரை தெளிவாக திட்டமிட்டு வருபவர்.

    சிங்கம் திரைப்படத்தில் விவேக் உடன் இணைந்து சாமி எனக்கு ஒரு உண்மை
    தெரிஞ்சாகணும் சாமி என்ற டையலாக் மிகவும் பிரபலமானது. முதல் மரியாதை படம்
    மூலம் பிரபலமான வசனமாக இருந்தாலும் பாண்டு தன்னுடைய ஸ்டைலில் அந்த
    வசனத்தை சிங்கம் படத்தில் உபயோகித்தது மக்களிடம் நல்ல வரவேற்பு
    கிடைத்தது. என்னமா கண்ணு திரைப்படத்தில் வடிவேலு - கோவை சரளா காமெடியில்
    "மேடம்" என்று ஒரு வித்யாசமான பாணியில் பாண்டு பேசிய வசனம் கூட மக்களின்
    பாராட்டை பெற்றது.

    இயக்குனர் கே.எஸ். ரவிகுமாருடன் இணைந்து சுமார் 31 படங்களில்
    நடித்துள்ளார். ஒரு இயக்குனருடன் அதிகமான படங்களில் நடித்த ஒரே நடிகர்
    என்ற பெருமை பாண்டுவையே சேரும். இளைய தளபதி விஜய் அறிமுகமான முதல்
    திரைப்படம் "நாளைய தீர்ப்பு". அந்த திரைப்படத்தில் விஜய்யின் முதல் ஷாட்
    எடுக்கப்பட்டது அவர் படித்த லயோலா கல்லூரியில் அவரது வகுப்பறையில் தான்.
    அங்கு அவருக்கு புரோஃபஸர் கதாபாத்திரமாக நடித்தது பாண்டு அவர்கள் தான்.
    மேலும் விஜய் நடித்த கோயமுத்தூர் மாப்பிள்ளை, போக்கிரி, பத்ரி, கில்லி என
    பல படங்களில் நடித்துள்ளார். விஜய் அதிகம் பேசமாட்டார். இயக்குனர்
    சொல்வதை அவர் காதில் வாங்காதது போல் இருப்பர். ஆனால் ஷாட் ஸ்டார்ட் என்று
    சொன்னவுடன் இயக்குனர் சொன்னதை விட மிகவும் அற்புதமாக நடிக்கும்
    திறமைசாலி என்றார் பாண்டு. அவரின் இந்த வளர்ச்சி பற்றி எந்த ஒரு
    ஆச்சரியமுமில்லை. ஏனென்றால் அவரின் நடிப்பு திறமை, டான்ஸ்,
    இன்வால்வ்மென்ட் இவை அனைத்தும் அவரை உயர்த்தும் என்று அன்றே தெரியும்
    என்றார்.

    Ajith and vijay movies are my all time favorite experience with them -says p.paandu.

    அது மட்டும் அல்ல தல அஜித் அறிமுகமான ஆசை திரைப்படத்திலும் அவரது தந்தை
    கதாபாத்திரத்தில் நடித்ததும் பாண்டு அவர்கள் தான். அதனை தொடர்ந்து
    வான்மதி திரைப்படத்திலும் தந்தை கதாபாத்திரத்தில் நடித்தார். அடுத்ததாக
    காதல் கோட்டை திரைப்படத்தின் ராஜஸ்தான் மாநிலத்தில் அவருடன் இணைந்து
    நடிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. நடிப்பு திறமை என்பது அவரிடம் கொட்டி
    கிடந்தது. அவரின் நடிப்பை நேரில் பார்ப்பதை விட ஸ்க்ரீனில் பார்க்க
    மிகவும் அழகாக இருக்கும். ஆதனால் தான் அவர் தல என்று மக்களால்
    போற்றப்படுகிறார். அவரின் அழகு சிரிப்பு முக ராசி இவை அனைத்தும்
    எம்.ஜி.ஆர் அவர்களை போலவே இருக்கும் என்று மிகவும் அழகாக அவர் மீது
    இருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறார் பாண்டு. இப்படி தல மற்றும் தளபதி
    இவர்கள் இருவருடனும் சுமார் 18 படங்களில் நடித்துள்ளார்.

    கமல், ரஜினி, விஜய் என திரையுலகில் பிரபலமாக இருக்கும் பல பேர் அரசியலில்
    வர வேண்டும் என்று மக்கள் ஆசைப்படுவது பற்றி பாண்டு என்ன சொன்னார் என்றால் - அது
    அவரவர் விருப்பம். யாராலும் இதற்கு கருத்து தெரிவிக்க முடியாது என்றார்.

    கமல்ஹாசனுடன் இணைந்து கடல் மீன்கள் மற்றும் பம்மல்.கே.சம்பந்தம் என இரு
    படங்களில் நடிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்ததால் பெரிதாக நெருங்கி
    பழகவில்லை. இருப்பினும் நாங்கள் திரைக்கு அப்பால் நெருங்கிய நண்பர்கள். அது
    போலவே ரஜினிகாந்த் சினிமாவிற்கு வருவதற்கு முன்னரே நெருங்கிய நண்பர்கள்.
    அவரின் வீட்டிற்கு பிருந்தாவனம் என்று வடிவமைத்து கொடுத்தது பாண்டு தான்.
    ராசியை மிகவும் நம்பும் மனிதர் என்பதால் அவரின் அனைத்து
    சந்தர்ப்பங்களிலும் என்னை அணுகுவார் என்றார்.

    வடிவேலு காமெடி பற்றி மிகவும் புகழ்ந்து பேசினார். அவரது பாணி ஒரு
    வித்தியாசமானது. கவுண்டமணி-செந்தில் காமெடியை எப்படி ரசிகர்கள்
    சளைக்காமல் பார்ப்பார்களா அதே போல வடிவேலுவின் நகைச்சுவையும் அருமை. அவர்
    தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும். நகைச்சுவை என்பது வரம். அதன்
    மூலம் மக்களை மகிழ்விப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. அவரின் அந்த சிறப்பான
    ஆற்றல் நிச்சயம் வீண் போக கூடாது என்றார் பாண்டு.
    நடிகர் பிரபு தேவாவின் மிக நெருக்கமான குடும்ப நண்பரும் பாண்டு தான் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். பல குடும்ப பிரச்சனைகளை பிரபு தேவா சந்தித்து வந்த போதிலும் - ஆறுதலாகவும் பல கோவில்களுக்கு அழைத்து செல்வதிலும் அக்கறை காட்டியவர் நடிகர் பாண்டு.

    இப்படி தனது பல இனிமையான அனுபவங்களை பல பெட்டிகளில் , பல நிகழ்வுகளில் பகிர்ந்து கொள்கிறார் நடிகர் பாண்டு. அவரின்
    இந்த தெளிவான திட்டமிட்ட வாழ்கை முறை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக
    இருக்கும். நல்ல நண்பராக இருப்பது எல்லோராலும் சினிமாவில் முடியாது . சிலரால் மட்டுமே சாத்தியம். அதில் பாண்டு முதன்மையானவர்.

    English summary
    Versatile comedy actor paandu tells his experience working with top heros of tamil cinima. P.paandu is a good drawing artist and also an versatile comedy actor.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X