அந்தக் கையில் மங்காத்தா.. இந்தக் கையில் சுறா.. வச்சு செய்றீங்களேய்யா! #SuraOnSunTV

சென்னை: அஜித் பிறந்த நாளை முன்னிட்டு மங்காத்தா படத்தை ஒளிப்பரப்பிய சன்டிவி, விஜய் ரசிகர்களை கவரும் வகையில் சுறா படத்தை போட்டு தாக்கியிருக்கிறது.

Recommended Video

அஜித் Bangalowல் என்ன இருக்கு? | வெளியான உண்மைகள் | Ajith Kumar

நடிகர் அஜித் இன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அஜித் ரசிகர்கள் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டனர்.

இன்றும் விதவிதமான ஹேஷ்டேக்குள் ட்ரென்ட்டாகி மிரட்டி வருகின்றனர். டிவி சேனல்களும் தங்களின் பங்குக்கு அஜித் படங்களை போட்டு அசத்தி வருகின்றன.

மங்காத்தா

மங்காத்தா

அந்த வகையில் அஜித்தின் 50 வது படமான மங்காத்தா படத்தை காலையில் ஒளிபரப்பியது சன் டிவி. வெங்கட் பிரபு இயக்கத்தில் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய படத்தை டிவியில் பார்த்து சிலாகித்தனர் அஜித் ரசிகர்கள்.

விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள்

சமூக வலைதளங்களிலும் #MankathaOnSunTV என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து கொண்டாடி மகிழ்ந்தனர். மங்காத்தா மூலம் அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்திய சன் டிவி தற்போது விஜய் ரசிகர்களையும் குஷிப்படுத்தியுள்ளது.

ஃபேமிலி ஆடியன்ஸ்

ஃபேமிலி ஆடியன்ஸ்

அதாவது மங்காத்தா படம் முடிந்த கையோடு, விஜயின் சுறா படத்தை ஒளிபரப்பி வருகிறது சன் டிவி. விஜய், தமன்னா, வடிவேல் கூட்டணியில் காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் என ஃபேமிலி ஆடியன்ஸையும் கவர் பண்ணும் வகையில் இந்த படத்தை ஒளிபரப்பி வருகிறது.

ரசிகர்கள் குஷி

ரசிகர்கள் குஷி

இதனால் குஷி அடைந்துள்ளனர் விஜய் ரசிகர்கள். மேலும் #VijayTheFaceOfKollywood என்ற ஹேஷ்டேக்கையும் விஜய் ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர். லாக்டவுன் என்பதால் டிவி சேனல்கள் பலவும் முன்னணி நடிகர்களின் படங்களை ஒளிபரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X