Ajith: அஜித்துடன் நைட் பார்ட்டி சென்ற பிரபலம்... கூட யாரெல்லாம் போயிருக்காங்கன்னு பாருங்க!

அஜர்பைஜான்: அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் இரண்டாவது கட்ட ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விடாமுயற்சியில் நடித்து வரும் இரண்டு பிரபலங்கள் அஜித்துடன் நைட் பார்ட்டிக்குச் சென்ற போட்டோ வைரலாகி வருகிறது.

அஜித்துடன் நைட் பார்ட்டி சென்ற பிரபலங்கள்: அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது தனது 62வது படத்தில் நடித்து வருகிறார். ஏகே 62 என அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் டைட்டில் விடாமுயற்சி என கன்ஃபார்ம் ஆகிவிட்டது. லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. விடாமுயற்சி படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

 Ajith: Arjun and Aaravs dinner photo with Ajith is trending

விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்றது. தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பையும் அஜர்பைஜானில் தொடங்கியுள்ளார் மகிழ் திருமேனி. இந்த வாரம் தொடங்கிய விடாமுயற்சி இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் கலந்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகவில்லை.

முன்னதாக அஜித்தும் த்ரிஷாவும் ஒரே விமானத்தில் அஜர்பைஜான் பறந்த வீடியோ மட்டும் வைரலாகியது. அதேபோல், அஜித்துடன் நடிப்பது மகிழ்ச்சியான தருணம் என ஆரவ் தனது இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டிருந்தார். அதில் அஜித்துடன் ஆரவ் எடுத்துக்கொண்ட போட்டோவையும் ஷேர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் விடாமுயற்சி படத்தில் அர்ஜுன் நடிப்பது மட்டும் உறுதிப்படாத தகவலாக இருந்தது, தற்போது அதுவும் கன்ஃபார்ம் ஆகிவிட்டது.

அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் விடாமுயற்சி ஷூட்டிங்கின் போது அஜித்துடன் அர்ஜுன், ஆரவ் இருவரும் ஒன்றாக ஹோட்டல் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் இரவு உணவு சாப்பிட்ட போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த போட்டோவில் மூவரும் செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளனர். மங்காத்தா படத்துக்குப் பின்னர் அஜித், அர்ஜுன் கூட்டணி விடாமுயற்சி படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் அஜித் - அர்ஜுன் - ஆரவ் இணைந்து நடிக்கும் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கி வருகிறாராம் மகிழ் திருமேனி. அதேபோல் த்ரிஷாவுக்கும் இந்தப் படத்தில் செம்ம மாஸ்ஸான ஆக்‌ஷன் சீன்ஸ் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அல்லது டீசர் ஏதேனும் ஜனவரி 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X