அஜித் என்னை கிட்டார் பயன்படுத்தக்கூடாது என்று சொன்னார் !யுவன் பகிர்ந்த தகவல்
சென்னை : பிஜிஎம் கிங் என அழைக்கப்படும் யுவன் சங்கர் ராஜா அஜித்துடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் பணியாற்றியுள்ளார்
நேர்கொண்ட பார்வை தொடர்ந்து வலிமை படத்தின் பாடல்களுக்கு யுவன் இசையமைத்துள்ளார்
இந்த நிலையில் அஜித் தன்னுடைய படத்தில் கிட்டார் பயன்படுத்த கூடாது என யுவனிடம் கூறியுள்ளார்.

அஜித் கூட்டணியில்
அஜித்திற்கு பில்லா, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களுக்கு அட்டகாசமான பிஜிஎம் இசை அமைத்தவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. பிஜிஎம் கிங் என அழைக்கப்படும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்கும் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான இசையை அளித்து வருகிறார். அந்த வகையில் ஹெச் வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் முதல் முறையாக வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை பற்றி அழுத்தமாகப் பேசுகிற இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மாஸான காட்சிகளுக்கு
நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் வயதான தோற்றத்தில் வக்கீலாக நடித்திருப்பார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருப்பார். அஜித்,யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகும் திரைப்படங்களில் இசைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்திருக்கும். குறிப்பாக பிஜியம் மியூசிக் அஜித்திற்கு யுவன் சங்கர் ராஜா ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்திருப்பார். பில்லா, மங்காத்தா உள்ளிட்ட படங்கள் அதில் அடங்கும். அதே போலத்தான் நேர்கொண்ட பார்வை படத்தில் பல மாஸான காட்சிகளுக்கு அதிரடியான பிஜிஎம் கொடுத்திருப்பார். குறிப்பாக பூங்காவில் நடக்கும் சண்டைக் காட்சிகளில் வரும் பிஜிஎம் மியூசிக் அனைவரையும் கவர்ந்தது.

கிட்டார் பயன்படுத்தாமல்
இந்நிலையில் நேர்கொண்ட பார்வை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அஜித், யுவன் சங்கர் ராஜாவுக்கு தனியாக தொலைபேசியில் அழைத்து நேர்கொண்ட பார்வையில் கிட்டார் பயன்படுத்த வேண்டாம் என கூறியுள்ளார். அதற்கு காரணமாக ஏற்கனவே பில்லா, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களுக்கு கிட்டார் பயன்படுத்தியே நம்ம காம்போவில் பெரும்பாலும் இசை இருக்கும். எனவே இந்த படத்தில் சற்று வித்தியாசமாக இருக்க கிட்டார் பயன்படுத்தாமல் இசையமைத்து கொடுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.

பூங்கா ஃபயிட்
ஆனால் யுவன் சங்கர் ராஜா கிட்டார் பயன்படுத்தாமல் அஜித்திற்கு மாஸான பிஜிஎம் கொண்டு வர முடியாது என தவிர்க்க முடியாத சில காரணங்களால் நேர்கொண்ட பார்வை படத்தில் கிட்டாரை பயன்படுத்தி பிஜிஎம் மியூசிக் போட்டிருப்பார். பூங்கா ஃபயிட் காட்சியில் அந்த பிஜிஎம் மியூசிக் இடம்பெற்றிருக்கும் ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றிருக்கும்
Recommended Video

சவாலாக எடுத்து
இந்நிலையில் யுவன் அஜித் கூட்டணி மீண்டும் இணைந்த வலிமை படத்தில் அஜித் சொன்ன வார்த்தைக்காக கிட்டார் பயன் படுத்த கூடாது என முடிவு செய்த் யுவன் சங்கர் ராஜா அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு கிட்டார் பயன்படுத்தாமலேயே வலிமை படத்தில் படத்தின் பாடல்களுக்கு இசையமைத்ததாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











