ரசிகரிடம் இருந்து செல்போனை பிடுங்கிய விவகாரம்.. மன்னிப்பு கேட்டார் அஜித்!
சென்னை: செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிய அஜித், அவரிடம் மன்னிப்பு கேட்டார்.
Recommended Video
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடிகர் அஜித் இன்று காலையிலேயே திருவான்மியூரில் வாக்களித்தார்.
தனது வீட்டின் அருகில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார் நடிகர் அஜித்.

கடுப்பான அஜித்
முகக் கவசம் அணிந்து வந்த அஜித்துடன் செல்பி எடுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர். அப்போது, ரசிகர் ஒருவர் தனது அஜித்துக்கு மிக நெருக்கமாக வந்து செல்பி எடுத்தார். இதனால் கடுப்பான அஜித் அவரது செல்போனை பிடுங்கினார்.

போனை பிடுங்கிய அஜித்
மேலும் வாக்குச்சாடிக்குள் செல்போனுக்கு அனுமதியில்லை செல்போனை பயன்படுத்தாதீர்கள் என அறிவுரை கூறினார். அஜித் ரசிகரிடமிருந்து செல்போனை பிடுங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

மன்னிப்பு கேட்ட அஜித்
இந்நிலையில் நடிகர் அஜித், போனை பிடுங்கிய ரசிகரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். சாரி சாரி என்று அஜித் அந்த ரசிகரிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

அனுமதியில்லை
வாக்குச்சாவடிக்குள் போனை கொண்டு வந்த போட்டோ எடுக்க முயன்ற ரசிகருக்கும் அறிவுரை வழங்கிய அஜித் அவரிடம் வாக்குச்சாவடிக்குள் செல்போன்கள் அனுமதியில்லை. அதனால் போட்டோ எடுக்காதீர்கள் என்று அட்வைஸ் கூறினார்.
ஹேஷ்டேக் ட்ரென்டிங்
இதனை தொடர்ந்து #அஜித் என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது. அஜித் வாக்களித்தது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











