செல்பி எடுக்க வந்த ரசிகர்கள்... 'குணமாக' அட்வைஸ் செய்து கிளம்பிய அஜித்!
நடிகர் அஜித் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
Recommended Video

சென்னை: செல்பி எடுக்க வந்த ரசிகர்களுக்கு நடிகர் அஜித் குணமாக அறிவுரை வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித். நடிப்பு மட்டுமல்லாது, பைக், கார் ரேஸ், ஆளில்லா விமானம், போட்டோகிராபி, சமையல் என பலத்துறைகளில் தனது பங்களிப்பை செலுத்தி வருகிறார்.

50 படங்களுக்கும் மேல் நடித்துவிட்ட அஜித், தற்போது விஸ்வாசம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டாலும், அஜித்தின் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
நடிகர் அஜித்தை அவரது ரசிகர்கள் தல என்று செல்லப் பெயரிட்டு மரியாதையாக அழைக்கின்றனர். ஆனால் அஜித் ரசிகர்களுடனான சந்திப்புகளை தவிர்த்தே வருகிறார்.
இந்நிலையில் அஜித் தனது மகள் படிக்கும் பள்ளிக்கு சமீபத்தில் சென்றார். அப்போது அந்த பள்ளியில் வேலை செய்யும் பணியாளர்கள் சிலர், அஜித்துடன் செல்பி எடுக்க முற்பட்டனர்.
ஆனால் இதை விரும்பாத அஜித், ரசிகர்களிடம் கனிவாகவும், குணமாகவும் பேசி பள்ளி வளாகத்தில் செல்பி எடுக்கக் கூடாது என அறிவுரை வழங்கினார். "இது பள்ளி வளாகம். இங்கே செல்போன் பயன்படுத்தக் கூடாது. செல்பி எடுக்கக் கூடாது. நானே உங்களை அழைத்து போட்டோ எடுத்துக் கொள்கிறேன்", என அந்த வீடியோவில் அவர் கூறுகிறார்.
ஆனால் அஜித் அவ்வளவு சொல்லியும், யாரோ ஒரு ரசிகர் இந்த காட்சிகளை வீடியோ எடுத்து, இணையத்தில் வெளியிட்டுவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











