அஜீத்துக்கு பெரிய்ய்ய மனசு: சொல்கிறார் கௌதம் மேனன்
சென்னை: அஜீத் குமாருக்கு மிகப் பெரிய மனது என்று இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.
அஜீத் குமார் கௌதம் மேனன் இயக்கத்தில் ஏற்கனவே நடிப்பதாக இருந்தது. ஆனால் சில பிரச்சனைகளால் அது நடக்காமல் போனது. இதையடுத்து அஜீத் ஒன்றும் என் படத்துக்கு தேவையில்லை என்றார் கௌதம் மேனன்.
இதையடுத்து அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றும் சூழலே ஏற்படவில்லை.

சூர்யா
கௌதம் மேனன் தனது காக்க காக்க நாயகன் சூர்யாவை வைத்து மீண்டும் ஒரு படத்தை துவங்கினார். ஆனால் சூர்யா படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

யாரை இயக்கலாம்
சூர்யா வெளியேறியதை அடுத்து யாரை வைத்து படம் எடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார் கௌதம் மேனன். இதற்கிடையே சூர்யா லிங்குசாமி படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.

அஜீத்
கௌதமுக்கும், தனக்கும் இடையே மனக்கசப்பு இருந்தபோதிலும் அஜீத் வலிய வந்து கால்ஷீட் கொடுத்தார். இதையடுத்து கௌதம் மேனன், அஜீத் பணியாற்றும் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் துவங்குகிறது.

கௌதம்
அஜீத் யாருக்கு உதவி செய்தாலும் சரி அதை ஒருபோதும் சொல்லிக் காட்ட மாட்டார். அவருக்கு மிகப்பெரிய மனசு என்று புகழ்ந்துள்ளார் கௌதம் மேனன்.

கதை
அஜீத்திடம் ஒரு வரியில் தான் கதையைக் கூறினேன். அது அவருக்கு பிடித்துப் போக உடனே ஓகே சொல்லிவிட்டார். முழுக் கதையையும் முடித்துவிட்டு அவரிடம் கூறுவேன் என்றார் கௌதம்.

அனுஷ்கா, கார்த்திக்
கௌதம் படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கவிருக்கிறார். அஜீத்துக்கு வில்லனாக பிரபல நடிகர் கார்த்திக் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











