Ajith - காட்டுக்குள் அஜித் செய்யும் வேலையை பாருங்க.. அவரும் கூட இருக்காரே.. அப்போ விடாமுயற்சி நிலைமை?

சென்னை: அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகி ஒரு ஷெட்யூலில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவிருக்கிறார். ஆனால் விடாமுயற்சி படத்தின் நிலைமை என்னவென்பது குறித்துதான் ஏகே ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். சூழல் இப்படி இருக்க அவருக்கு சிறிய அளவிலான ஆபரேஷன் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பைக் டூருக்கு சென்றிருக்கிறார் அஜித்குமார். அதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகின.

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு படம் ஹிட்டானதை அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டானார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மகிழ் திருமேனி நல்ல இயக்குநர் என்று கோலிவுட்டில் பெயர் எடுத்திருக்கிறார். எனவே அவரும், அஜித்தும் இணையும் படம் எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் உச்சக்கட்டமாக வைத்திருக்கிறார்கள். படத்தின் பெயர் கடந்த வருடம் மே மாதம் ஒன்றாம் தேதி அஜித் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்டது.

Ajith Bike Ride Photos Goes Trending On Social Media

நோ அப்டேட்: அதற்கு பிறகு படத்திலிருந்து எந்தவிதமான அப்டேட்டும் இதுவரை வெளிவரவில்லை. படத்தின் ஷூட்டிங் மட்டும் அஜர்பைஜானில் தொடங்கியது. முதலில் கேமராமேனாக நீரவ் ஷா கமிட்டானார். ஆனால் திடீரென்று அவர் விலகி ஓம் பிரகாஷ் கமிட்டானார். அதேபோல் ஆர்ட் டைரக்டர் மிலன் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே மரணம் அடைந்தார். இப்படி வரிசையாக தடங்கல்கள் வந்தாலும் அஜர்பைஜானில் மகிழ் திருமேனி தொடர்ந்து ஷூட் செய்துவந்தார். அதில் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அஜித்துக்கு ஆபரேஷன்: அங்கு முதல் கட்ட ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு. அதற்கு யூகங்களாக பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. அதாவது நினைத்ததைவிட பட்ஜெட் அதிகரித்துவிட்டது அதனால்தான் லைகா படக்குழுவை திருப்பி அழைத்துவிட்டது என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதெல்லாம் இல்லை என்று ஏகே ரசிகர்கள் கூறினர். சூழல் இப்படி இருக்க சில வாரங்களுக்கு முன்னதாக அஜித்துக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தள்ளிப்போன ஷூட்டிங்: அஜித்துக்கு அறுவை சிகிச்சை நடந்ததால் ஷூட்டிங் தள்ளிப்போகும் என்று கணிக்கப்பட்டது. அதாவது மார்ச் 15ஆம் தேதி படத்தின் அடுத்த ஷெட்யூல் அஜர்பைஜானிலேயே தொடங்கலாம் என்று கூறப்பட்ட சூழலில் அஜித் இப்போது பைக்கை எடுத்துக்கொண்டு டூர் கிளம்பியிருக்கிறார். இதனைப் பார்த்த ஏகே ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவதா இல்லை அதிர்ச்சி அடைவதா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். ஏனெனில் அஜித் பைக் டூர் சென்றால் குறைந்தபட்சம் 15 நாட்களிலிருந்து ஒரு மாதமாவது திரும்பி வர ஆகும். ஆக, ஷூட்டிங் இப்போதைக்கு இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

ட்ரெண்டாகும் புகைப்படங்கள்: இந்நிலையில் அஜித்துடன் மஞ்சு வாரியர் ஏற்கனவே பைக் டூர் சென்றது போல் இப்போது ஆரவ்வும் சென்றிருக்கிறார். தற்போது பைக் டூரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் ஸ்னூக்கர் விளையாடும் அஜித் இன்னொரு புகைப்படத்தில் காட்டுக்குள் சமையலும் செய்கிறார். அவருடன் ஆரவ் உள்ளிட்டோர் இருக்கின்றனர். அதேபோல் இன்னொரு வீடியோவில் சக பைக் ரைடர் ஒருவருக்கு எப்படி பைக் ஓட்ட வேண்டும் என்று வகுப்பும் எடுக்கிறார் அஜித். இதையெல்லாம் பார்த்த அஜித் ரசிகர்கள் இதெல்லாம் சரிதான் அந்த விடாமுயற்சி நிலைமையை சொன்னீங்கனா நாங்க உங்களை விட்ருவோம் ஏகே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X