Ajith Birthday: அஜித்தின் 52வது பிறந்தநாளில் அல்டிமேட் ட்ரீட்... ஏகே 62 சம்பவம் லோடிங்...
சென்னை: அஜித் நடிப்பில் இறுதியாக துணிவு திரைப்படம் கடந்த பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகியிருந்தது.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உடனடியாக ஏகே 62 படத்தில் நடிக்கவிருந்தார் அஜித்.

இந்தப் படம் குறித்து இன்னும் அப்டேட் வெளியாகாமல் உள்ள நிலையில், அஜித் நாளை தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகே 62 படத்தின் அப்டேட்டை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
ஏகே 62 சம்பவம் லோடிங்
பொங்கலுக்கு வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இதனையடுத்து தனது 62வது படத்தில் நடிக்க ரெடியானார் அஜித். துணிவு படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போதே, ஏகே 62 குறித்த அப்டேட் வெளியாகி வைரலானது. அதன்படி, அஜித்தின் ஏகே 62 படத்தை லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும், அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், விக்னேஷ் சிவனின் கதையில் அதிருப்தி ஏற்பட்டதால், அஜித்தும் லைகாவும் சேர்ந்து அவரை ஏகே 62 படத்தில் இருந்து கழட்டிவிட்டனர். இதனால், ஏகே 62 படத்தின் இயக்குநர் யார் என்பது கேள்விக்குறியானது. அதேநேரம் ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், படக்குழு தரப்பில் இருந்து இதுவரை அபிஸியல் அப்டேட் வெளியாகவில்லை.
ஏகே 62 படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால், விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி உள்ளே வந்ததால் அது தாமதமானது. மேலும், அஜித் தந்தையின் மறைவு போன்றவற்றால் ஏகே 62 அப்டேட் வெளியாகவில்லை. இதனால் ஏமாற்றத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு தரமான ஏகே 62 அப்டேட் லோடிங் ஆகி வருகிறதாம். மே 1ம் தேதியான நாளை அஜித் தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அதனால், அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஏகே 62 அப்டேட் வெளியாகிறதாம். அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் டீசர் என இரண்டு அப்டேட்களை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இந்த அப்டேட்கள் இன்று மாலை ஒன்றும், நாளை ஒன்றுமாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு அப்டேட்களும் அஜித் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இதனிடையே மகிழ் திருமேனி தற்போது ஏகே 62 ஸ்க்ரிப்ட் வேலைகளை முழுவதுமாக முடித்துவிட்டாராம். அதுமட்டும் இல்லாமல் படப்பிடிப்புக்கான மொத்த ஷெட்யூலையும் பக்காவாக செட் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், வழக்கமாக படப்பிடிப்பை ரொம்ப பொறுமையாக நடத்துவார் மகிழ் திருமேனி. ஆனால், ஏகே 62 படப்பிடிப்பை மொத்தமே 120 நாட்களில் முடித்துவிட திட்டமிட்டுள்ளாராம். இதனால், இந்தாண்டு இறுதிக்குள் ஏகே 62 ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில, ஏகே 62 ஷூட்டிங் முழுவதும் வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. துணிவு பாணியில் சென்டிமெண்ட் எதுவும் இல்லாமல் பக்கா ஆக்ஷன் ஜானரில் உருவாகும் ஏகே 62 படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும், அஜித்துடன் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதனால் அடுத்தடுத்து ஏகே 62 அப்டேட்டை எதிர்பார்த்து அஜித் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











