Ajith Birthday: அஜித்துக்கு 'தனித்தனியாக’ வாழ்த்து சொன்ன நயன்-விக்கி... பிறந்தநாளுக்கு மட்டும் தானா?

சென்னை: தமிழின் முன்னணி நடிகரான அஜித் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதனையடுத்து அவருக்கு அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் உட்பட பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே அஜித் நடிக்கவுள்ள ஏகே 62 படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அஜித்தின் பிறந்தநாளுக்கு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனித்தனியாக வாழ்த்துக் கூறியுள்ளனர்.

 Ajith Birthday: Nayanthara and Vignesh Shivan with Ajith on his birthday on Twitter

அஜித் பிறந்தநாள் - நயன், விக்கி வாழ்த்து: அமராவதி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அஜித், இன்று கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக கலக்கி வருகிறார். ரசிகர் மன்றங்களை கலைத்தும் இவருக்கு இன்னும் கொஞ்சம் கூட மாஸ் குறையவே இல்லை. இந்நிலையில், இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடும் அஜித், வழக்கம் போல சைலண்ட் மோடில் தான் இருக்கிறார்.

இதனிடையே அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது ஏகே 62 டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படத்திற்கு விடாமுயற்சி என டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. லைகா தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார், அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.

 Ajith Birthday: Nayanthara and Vignesh Shivan with Ajith on his birthday on Twitter

ஒரு வருடத்திற்கு முன்பாகவே ஏகே 62 படத்தில் கமிட்டான விக்னேஷ் சிவன், ஸ்கிரிப்ட்டில் சொதப்பியதால் தான் திடீரென நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. நயன்தாரா மூலமாக தான் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைத்ததாம். இதனால், அஜித் மீது நயனுக்கு கோபம் என்றும், இனிமேல் அவருடன் இணைந்து நடிக்கமாட்டேன் என சொல்லிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

அதேபோல், விக்கியும் அஜித் மீது கடுப்பில் இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், அதன்பின்னர் அப்படியெல்லாம் இல்லை என அவரே விளக்கமும் கொடுத்திருந்தார். ஏகே 62 கதை அஜித்துக்கு ஓக்கே தான், ஆனால் லைகாவுக்கு தான் பிடிக்கவில்லை எனவும் சொல்லி சமாளித்திருந்தார். இந்நிலையில், அஜித்தின் பிறந்தநாளுக்கு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனித்தனியாக வாழ்த்துக் கூறி டிவீட் செய்துள்ளனர்.

 Ajith Birthday: Nayanthara and Vignesh Shivan with Ajith on his birthday on Twitter

விக்கியும் நயனும் அஜித்தின் பிறந்தநாளுக்கு மட்டும் தான் வாழ்த்துக் கூறினார்களா என ரசிகர்கள் உற்றுப் பார்த்தனர். ஆனால், விடாமுயற்சி படத்துக்கும் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து நயன்தாரா தனது டிவிட்டரில், பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் சார், இந்த வருடம் உங்களுக்கு சிறப்பாக அமையும் என பதிவிட்டு விடாமுயற்சி படத்துக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், விக்கியும் தனது டிவிட்டரில் அஜித்துக்கு வாழ்த்துக் கூறியுள்ளார். அதில், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் சார். உங்கள் மகிழ்ச்சியே எங்கள் மகிழ்ச்சியும், எல்லையில்லா அன்பு என்றும் நிரந்தரம் என பதிவிட்டுள்ளார். மேலும் விடாமுயற்சி வெற்றிப் பெறும் என அஜித் உட்பட மொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். விக்கி, நயன் இருவரும் அஜித்தின் பிறந்தநாளுக்கும் விடாமுயற்சி படத்தின் வெற்றிக்கும் வாழ்த்தியதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X