ஓய்வு நேரத்தில் அஜித் என்னவெல்லாம் செய்வார் தெரியுமா.. நீங்களும் கத்துக்கோங்க தல ரசிகாஸ்!

அஜித்தின் எளிமையான வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சென்னை: நடிகர் அஜித்தின் பிறந்ததினமான இன்று, அவர் தனது வாழ்க்கையை எப்படி எளிமையாக வாழ்கிறார் என்பதைக் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரசிகர்களால் தல எனக் கொண்டாடப்படும் நடிகர் அஜித்தின் பிறந்த தினம் இன்று. அவரது பட அப்டேட்களையே திருவிழா போல் கொண்டாடும் ரசிகர்கள், இதனை விட்டு விடுவார்களா. சமூகவலைதளங்களிலும், நேரில் பல இடங்களிலும் அஜித் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.

திரையில் தனக்கென சில வரைமுறைகளை வகுத்துக் கொண்டு நடித்து வருபவர்களில் அஜித்தும் ஒருவர். பணம் கிடைத்தால் மட்டும் போதும் என நினைக்காமல், தன் படங்களை பார்க்கும் ரசிகர்களின் மனமும் முக்கியம் என்பதை உணர்ந்து கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பவர். அதனால் தான் ரசிகர்கள் அவரைத் தல எனக் கொண்டாடுகிறார்கள்.

சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் மற்றவர்கள் அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய விசயங்கள் இருக்கிறது. பொதுவாக சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கை முறையை அறிந்துகொள்வதில் அனைவருக்கும் அதிக ஆர்வம் இருக்கும். அதுவும் அஜித் போன்ற ஒரு நடிகரின் வாழ்க்கையை பற்றி தெரிந்துகொள்வது என்றால் கேட்கவா வேண்டும்.

இதோ நமக்கு கிடைத்த சில சுவாரஸ்யத் தகவல்கள் உங்களுக்காக...

வேறுபட்டவர் அஜித்:

வேறுபட்டவர் அஜித்:

சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கை மிக ஆடம்பரமாகவும், கேலிக்கைகள் அதிகமாகவும் இருக்கும் என்று தான் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் இருந்து முற்றிலும் வேறுபட்டவர் அஜித். மிக ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்பவர்.

ஓய்வு நாட்களில்..

ஓய்வு நாட்களில்..

அதிகாலையில் எழும் பழக்கம் கொண்டவர் அஜித். படப்பிடிப்பு இல்லாத நாட்களில், காலையில் எழுந்து மனைவிக்கு சமயங்களில் டிபன் செய்து கொடுத்து அசத்துவார். மகள் அனோஷ்காவைத் தானே பள்ளியில் கொண்டு சென்று விடுவார்.

இது தான் ஓய்வு:

இது தான் ஓய்வு:

பின்னர் வீடு திரும்பியதும் ஓய்வெடுப்ப நினைப்பார். ஆனால், அவர் ஓய்வு என குறிப்பிடுவது தான் வித்தியாசமானது. தனக்கு பிரியமான பொழுதுபோக்கை மேற்கொள்வது தான் அவரது அகராதியில் ஓய்வு. அதன்படி, தனக்கு பிடித்தமான வேலைகளில் ஈடுபடுவார்.

பிளெம்பிங் வேலைகள்:

பிளெம்பிங் வேலைகள்:

இதைப் படித்ததும் அவர் ரேஸ் கார் ஓட்டுவார், ஹெலிகாப்டர் செய்வார், விளையாடுவார் என நீங்கள் நினைத்தால் நிச்சயம் அது தவறு. வீட்டில் இருக்கும் பிளெம்பிங் வேலை, எலெக்ட்ரிக் வேலைகளை எல்லாம் தானே பார்த்து விடுவாராம். ஏதாவது அறைக்கு பெயிண்ட் அடிக்க வேண்டுமென்றால் கூட, அதையும் தானே செய்வாராம்.

குடும்பமே மகிழ்ச்சி:

குடும்பமே மகிழ்ச்சி:

இப்படி வீட்டு தேவைகளை பொறுப்பாக தானே செய்வது தான் அஜித்தின் பொழுதுபோக்கோம். எப்போதும் சுறுசுறுப்பாக எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அஜித். குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவது அவருக்கு பிடித்த மற்றொரு பொழுதுபோக்கு.

முன்னுதாரணம்:

முன்னுதாரணம்:

அதனால் தான், ஒவ்வொரு படம் முடிந்ததும் தன் குடும்பத்தோடு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தான் மட்டுமின்றி, தன்னைச் சுற்றி இருப்பவர்களும் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுபவர். ஆனால், அதனை அறிவுரையாக மற்றவர்களுக்கு கூற மாட்டார். தன் வாழ்க்கையைப் பார்த்து மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார்.

தல ரசிகாஸ்:

தல ரசிகாஸ்:

என்ன ரசிகாஸ், படத்தில் மட்டுமல்ல, தல நிஜத்திலும் எப்படி எளிமையானவர்னு தெரிஞ்சுகிட்டீங்களா. ‘நான் கஷ்டப்பட்டு வேலை பார்க்குறேன், வீட்டுக்கு வந்ததும் டிவி பார்ப்பேன், தூங்குவேன். பிள்ளைகளுடன் விளையாட மாட்டேன். மனைவியுடன் பேச மாட்டேன்' என இருப்பவர்களா நீங்கள். அப்படியானால் தல போலவே நீங்களும் மாறுவது தான், அவருக்கு ரசிகராக நீங்கள் செய்யும் பெரிய விசயம். அதோடு, அஜித்துக்கு உங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கமெண்டில் பதிவு செய்யலாமே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X