அஜீத்தின் அடுத்த படம் கவுதம் மேனனுக்கா?
தயாரிப்பாளர் ஏஎம் ரத்னத்தின் கடன் பிரச்சினைகளை தீர்க்க அவருக்கே மீண்டும் ஒரு படம் நடித்துத் தரப் போகிறார் அஜீத் என்று ஒரு செய்தி உலா வரும் நிலையில், கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க அஜீத் தயாராவதாக இன்னொரு செய்தி கிளம்பியுள்ளது.
ஏஎம் ரத்னத்துக்கு உதவுவதற்காகவே அஜீத் ஆரம்பம் என்ற படத்தில் நடித்துக் கொடுத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் படத்தின் மூலம் வரும் லாபம் கூட, தன் கடன்களை அடைக்கப் போதாது என்ற நிலைதான் ரத்னத்துக்கு.

ஆனால் அவரது பண்பு மற்றும் தன்னை நடத்திய விதம் அஜீத்துக்குப் பிடித்துப் போக, மீண்டும் ஒரு படத்தை நடித்துக் கொடுக்க அஜீத் சம்மதித்துள்ளாராம். வீரம் படத்துக்குப் பிறகு, தான் நடிக்கும் படத்துக்கு ரத்னமே தயாரிப்பாளராக இருக்கட்டும் என அஜீத் கூறியுள்ளாராம்.
இந்த நிலையில் கவுதம் மேனனுக்கும் கொஞ்சம் கை கொடுப்போமே என்ற எண்ணத்தில், அவருக்கு கால்ஷீட் தர முடிவு செய்துள்ளாராம் அஜீத்.
இரு ஆண்டுகளுக்கு முன் அஜீத்தை வைத்து கவுதம் மேனன் படம் இயக்க அறிவிப்பெல்லாம் வெளியாகி, பின்னர் கதைப் பிரச்சினையால் அந்தத் திட்டம் ட்ராப்பானது நினைவிருக்கலாம்.
பொதுவாக சினிமாவில் நல்ல நிலையில் இருந்து நொடித்துப் போகிறவர்களை ஒதுக்கிவிடுவதுதான் வழக்கம். ஆனால் அஜீத்தோ, அவர்களை தேடிப் போய் கை கொடுக்கிறார். நல்ல மனசு!


Click it and Unblock the Notifications











