அனோஷ்காவின் பிறந்தநாளை சொகுசுக் கப்பலில் கொண்டாட அஜீத்- ஷாலினி முடிவு
சென்னை: ஆரம்பம் படத்தின் வெற்றி மற்றும் வீரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் குடும்பத்துடன் ஆஸ்திரேலியா சென்றுள்ளார் நடிகர் அஜீத். அங்கு தனது ஒரே மகள் அனோஷ்காவின் பிறந்த நாளை கப்பலில் கொண்டாட முடிவு செய்துள்ளார்களாம் அஜீத்-ஷாலினி தம்பதியினர்.
அமர்க்களம் பட ஷூட்டிங்கில் காதல் வசப்பட்ட அஜீத் - ஷாலினி ஜோடி, கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதனையடுத்து 2008ம் ஆண்டு அவர்களுக்கு அனோஷ்கா என்றப் பெண் குழந்தைப் பிறந்தது.
வரும் ஜனவர் 3ம் தேதி அனோஷ்காவின் 6வது பிறந்ததினம். அதனை ஆஸ்திரேலியாவில் கப்பலில் கொண்டாட திட்டமிட்டுள்ளார்களாம்.

அனோஷ்கா...
அனோஷ்கா என்றால் கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுபவர் என்று அர்த்தம். தங்களது கனவுகளையும், எதிர்பார்ர்புகளையும் நிறைவேற்றப் பிறந்த தங்களது செல்ல மகளின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக இப்போதே ஆஸ்திரேலியாவுக்குச் சென்று விட்டார்களாம் அஜீத்-ஷாலினி தம்பதியினர்.

ஷாம்லி....
அவர்களுடன் ஷாலினியின் தங்கையான ஷாம்லியும், சகோதரர் ரிச்சர்ட்டுமுடன் சென்றுள்ளார்கள்.

வீரம் ரிலீஸ்...
ஆஸ்திரேலியா கிளம்புவதற்கு முன்னர் தனது வீரம் படத்தினைப் பார்த்த அஜீத், சரியாக படம் வெளியாகும் ஜனவரி 10ற்கு முதல் தினம் சென்னை வர திட்டமிட்டுள்ளாராம்.

பாராட்டு...
வீரம் படம் நன்றாக வந்துள்ளதாக அதன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரைச் சந்தித்து அஜீத் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டு கொண்டாட்டம்....
சிட்னியிலிருந்து வெலிங்டன் செல்லும் சொகுசுக் கப்பலில் பயணம் மேற்கொண்டுள்ளனர் அஜீத் குடும்பத்தினர். எனவே, வரும் புத்தாண்டையும் அதனைத் தொடர்ந்து ஜனவரி 3ம் தேதி தனது மகளின் பிறந்த தினத்தையும் அதே சொகுசுக் கப்பலில் கொண்டாட திட்டமிட்டுள்ளாராம் அஜீத்.


Click it and Unblock the Notifications











