twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜித்தோட புது பெயர் ”தூக்கு துரை” ஆனா அவரோட மாஸ் வரலாறு என்ன தெரியுமா?

    அஜித்தின் மாஸான பெயர்களை தற்போது பார்க்கலாம்.

    |

    சென்னை: நடிகர் அஜித்தின் திரைப்படங்களில் பேசப்பட்ட கதாப்பாத்திரங்களை தற்போது பார்க்கலாம்.

    அஜித் தற்போது சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இப்படத்தில் அஜித் கதாபாத்திரத்தின் பெயர் "தூக்கு துரை" என்று வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பெயர் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் வேளையில், ரசிகரகளால் அதிகம் கொண்டாடப்பட்ட அஜித்தின் கதாப்பாத்திரப் பெயர்களை தற்போது பார்க்கலாம்.

    ஜீவா

    ஜீவா

    அஜித்தின் அதிகமான படங்களில் அவருடைய கதாபாத்திரத்திற்கு வைக்கப்பட்ட பெயர் சிவாதான். காதல் மன்னன், வில்லன், வாலி என பட்டியலிடலாம். அதற்கு அடுத்தபடியாக ஜீவா என்ற பெயர். ஆசை, அவள் வருவாளா, வரலாறு என பல படங்களில் ஜீவா என்ற பெயருடன் நடித்திருக்கிறார். சாஃப்டான கதாபாத்திரமாக இருந்தால் இந்த இரண்டில் ஒரு பெயர் நிச்சயமாக இருக்கும். இது இல்லாமல், செல்வம், அர்ஜுன், மனோகர் போன்ற பெயர்களிலும் நடித்துள்ளார்.

    முருகதாஸ்

    முருகதாஸ்

    அஜித்தின் படங்களில் மிக முக்கியமான மாஸ் படங்களில் ஒன்று தீனா. இப்படத்தில் அஜித் வரும் போது ஒலிக்கும் தீம் ம்யூசிக், "கை இருக்கும் காலிருக்கும்... உடம்பில் உயிரிருக்காது" போன்ற பஞ்ச் வசனங்களினால் மாஸ் காட்டியிருப்பார் தல. அப்படத்தின் மூலமாகத்தான் முதன் முதலில் அஜித்துக்கு தல என்ற பெயர் வந்தது தெரிந்த விஷயம். அஜித்தின் மாஸான கதாப்பாத்திரத்திற்கு ஏற்றதுபோல் அவரின் பெயரும் "தீனா" என வைத்திருந்தார் இயக்குனர் ஏஆர்.முருகதாஸ்.

    குரு

    குரு

    தீனா திரைப்படத்தில் "தல" என அழைக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக "தல போல வருமா" என பாடலை வைத்து அட்டகாசம் திரைப்படத்தில் கலக்கினர். இன்னும் சொல்லப்போனால் அட்டகாசம் திரைப்படத்திற்கு பிறகுதான் அதிகமாக எல்லோரும் அஜித்தை தல என கொண்டாட ஆரம்பித்தனர். அட்டகாசம் திரைப்படம் வந்த காலகட்டங்களில் தூத்துக்குடியில் மாஸ் காட்டும் அஜித்தாக வரும் "குரு" என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்றளவும் அட்டகாசம் குரு என்றால் அட்டகாசமாகவே உள்ளது.

    வரலாறு

    வரலாறு

    வரலாறு திரைப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் தோன்றி மிகப்பெரிய நடிப்பு புரட்சி செய்தார் அஜித். சிட்டிசனின் பத்து கெட்டப் மாற்றி நடித்ததை விட பர்பெக்‌ஷன், நுணுக்கம், நடை உடை பாவனை என பல விஷயங்களில் அஜித் பேசப்பட்டார். பரதநாட்டிய கலைஞராக நளினம் பிடிப்பது, வீல் சேரில் உட்கார்ந்துகொண்டே தொழிலதிபராக அதிகாரம் செய்வது என அவர் ஏற்றுக்கொண்ட "சிவசங்கர்" என்ற கதாப்பாத்திரம் எப்போதும் ரசிக்கக் கூடிய ஒன்று. பொதுவாக மாஸ் ஹீரோ என்றாலே தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் பெயரை சொல்லி சொல்லி பேமஸ் ஆக்குவதுதான் தமிழ் சினிமாவில் வரலாறு. ஆனால் அதை வரலாறு திரைப்படத்தில் அஜித் உடைத்தார். மாஸ் காட்டும் சிவசங்கர், தன்னுடைய பெயரை படத்தில் ஒரே ஒரு இடதில்தான் சொல்லுவார். (அது எங்கன்னு கண்டுபிடிங்க பார்க்காலம்.)

    என்னை அறிந்தால்

    என்னை அறிந்தால்

    கௌதம் மேனனின் என்னை அறிந்தால் படத்தின் தலைப்பு வெளியானதும் சில விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி படம் வெற்றி பெற்றது. அதற்கு அஜித், திரைக்கதை, ஆக்‌ஷன், கௌதம் மேனன் என பல காரணங்கள் இருந்தாலும், சத்யதேவ் என்ற பெயரின் பின்னால் இருக்கும் கம்பீரமான ஐபிஎஸ் ஆபீசர் என்ற பிம்பம் மிக முக்கியமானது. சத்யதேவ் என்ற பெயரை நீங்கள் உச்சரிக்கும்போது மென்மையாக உச்சரித்தால் அதன் அழகு போய்விடும். காதல், அன்பு, பாசம் இவற்றைத் தாண்டி குற்றங்களுக்கு எதிராக தோட்டாக்கள் தெறிக்க செய்யும் ஒரு உருவத்திற்கு அந்த பெயர் அவசியமாக இருந்தது. அதனால் கொண்டாடவும் பட்டது.

    மங்காத்தா

    மங்காத்தா

    அஜித்தின் திரைப்படங்களிலேயே அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயராக இருப்பது விநாயக் மகாதேவ் தான். தெளிவாக திட்டமிடுதல், பாசம் காட்டுவதுபோல் நடித்தல், துரோகம், வஞ்சகம், வன்மம், பேராசை என விரும்பத்தகாத எல்லா குணங்களையும் ஒன்றிணைத்த ஒருவராக அஜித் இருந்து ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்ட பெயர் விநாயக் மகாதேவ்.

    அஜய்குமார்

    அஜய்குமார்

    சிறுத்தை சிவாவின் திரைப்படங்களில் அஜித் நடிக்க ஆரம்பித்த பிறகு வீரம் திரைப்படத்தில் "விநாயகம்". வேதாளம் திரைப்படத்தில் "கணேஷ்" என பிள்ளையாரின் பெயரையே வைத்தார். விவேகம் திரைப்படம் முந்தைய படங்களிலிருந்து மாறுப்ட்ட படமாக அமைந்ததால் அப்படத்தில் அஜய்குமார் ஏகே என அழைக்கப்பட்டார். இப்போது விஸ்வாசம் திரைப்படத்தில் ஒரு அஜித்துக்கு "தூக்கு துரை" என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு ரசிகர்களால் கொண்டாடப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English summary
    Ajith character name in Viswasam movie is revealed as “Thooku Dhurai”. We have to wait to see how Ajith fans will celebrate this different name as earlier celebrated.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X