மதுரை பாஷை பேசி விஸ்வாசம் டப்பிங்கை முடித்து வைத்த அஜித்
சென்னை: நடிகர் அஜித் விஸ்வாசம் திரைப்பட டப்பிங் வேலைகளை முடித்துள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் விஸ்வாசம். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்பதால், ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோதே போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளையும் ஆரம்பித்துவிட்டனர். இப்போது விஸ்வாசம் திரைப்படத்தின் டப்பிங்கை அஜித் முடித்துள்ளார்.
இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித் டப்பிங்கில் என்னென்னெ வெரைட்டி காண்பித்திருக்கிறார் என்பதை படத்தை பார்த்து தான் தெரிந்துகொள்ள முடியும். குறிப்பாக அஜித் குரலில் மதுரை பாஷையைக் கேட்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
ஹைதராபாத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புக்காக மும்பை சென்றுள்ளது. மும்பையில் ஒரு பாடல் காட்சியை படமாக்கி வருகின்றனர்.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன், விவேக், தம்பிராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா, யோகிபாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











