மகிழ் திருமேனிக்கு அஜித் போட்ட கண்டிஷன்... ஏகே 62 அப்டேட் தாமதமாக இதுதான் காரணமா..?
சென்னை: துணிவை தொடர்ந்து அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த ஏகே 62 படத்தை தற்போது மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
மகிழ் திருமேனி சொன்ன கதை அஜித்துக்கும் லைகா நிறுவனத்துக்கும் பிடித்துவிட்டதால் விரைவில் அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் கடைசி நேரத்தில் மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட கண்டிஷனால் தான் இன்னும் அப்டேட் வரவில்லை என தகவல் கிடைத்துள்ளது.

ஏகே 62 அப்டேட்.?
கடந்த மாதம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம், சூப்பர் டூப்பட் ஹிட் லிஸ்ட்டில் இணைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருந்தார் அஜித். தற்போதைக்கு ஏகே 62 என்ற தலைப்பில் உருவாகவிருந்த இந்தப் படத்தை லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் அஜித், லைகா நிறுவனத்துக்கு திருப்தி இல்லையென சொல்லப்படுகிறது. அதனால் விக்னேஷ் சிவனை நீக்கியதோடு ஏகே 62 அப்டேட் வெளியாவதிலும் தாமதமானது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் ஏகே 62
இதனைத் தொடர்ந்து அஜித்தின் ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது உறுதியானதாக சொல்லப்படுகிறது. மகிழ் திருமேனியின் படங்களில் திரைக்கதை எப்போதுமே ஸ்ட்ராங்காக இருக்கும். அதனால் அஜித்தும் லைகாவும் துணிந்து இறங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. மகிழ் திருமேனி சொன்ன கதையும் பிடித்திருந்ததால் அஜித், லைகா என இருதரப்பில் இருந்து க்ரீன் சிக்னல் கிடைத்துவிட்டதாம். இதனால் விரைவில் ஏகே 62 அப்டேட்டை எதிர்பார்க்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜித் போட்ட கண்டிஷன்
ஏகே 62 படத்தின் கதையை பிஎஸ் மித்ரன் எழுதியதாக தகவல் கிடைத்துள்ளது. அவரது இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்தாண்டு வெளியான சர்தார் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இயக்குநர் மகிழ் திருமேனிக்கு அஜித் ஒரு முக்கியமான கண்டிஷன் போட்டுள்ளாராம். அதன்படி ஏகே 62 படத்தில் ஆக்ஷன் காட்சிகள் தூக்கலாக இருக்க வேண்டுமென கூறியுள்ளாராம். சுருக்கமாக ரசிகர்களுக்கான ஃபேன் பாய் சம்பவமாக இருக்க வேண்டும் என அஜித் எதிர்பார்க்கிறாராம்.

விரைவில் முடிவுக்கு வரும் பஞ்சாயத்து
தடையற தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் படங்களில் ஆக்ஷன், மேக்கிங் என மிரட்டியிருந்தார் மகிழ் திருமேனி. அதனால் ஏகே 62 படமும் அஜித் எதிர்பார்த்தபடி இருக்கும் என மகிழ் திருமேனி வாக்கு கொடுத்துள்ளாராம். இதற்காகவே அஜித் காத்திருந்ததாகவும், அதனால் தான் ஏகே 62 அப்டேட் இன்னும் வெளியாகவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இதனைய்டுத்து விரைவில் ஏகே 62 அப்டேட்டை படக்க்ழு வெளியிடவுள்ளதாம். முன்னதாக இந்தப் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறியதும், கேஎஸ் ரவிகுமார், வெங்கட் பிரபு, விஷ்ணுவர்த்தன் ஆகியோரும் அஜித்துக்கு கதை சொன்னதாக தெரிகிறது. இறுதியாக அஜித்தும் லைகாவும் மகிழ் திருமேனியை டிக் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











