துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற சகோதரிகள்..மனதார பாராட்டிய அஜித் !

சென்னை : தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற சாகோதரிகளை நடிகர் அஜித் பாராட்டி ஊக்கம் அளித்தார்.

சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள வீராபுரத்தில் மாநில அளவிலான துப்பாக்கிசுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் தங்கம் வென்ற சகோதரிகளை நடிகர் அஜித் வெகுவாக பாராட்டி மேலும் இதுபோன்று பல தங்கப்பதக்கங்களை வெல்ல வேண்டும் என கூறினார்.

தங்கம் வென்றார்

தங்கம் வென்றார்

நாமக்கல் ஷூட்டிங் அகாடமியை சேர்ந்த 12 பேர் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர். 25 மீட்டர் 22 ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் சீனியர் பிரிவில் தனித்திறன் போட்டியில் ராகவி தங்கப் பதக்கம் வென்றார். இவர் தொடர்ந்து 3-வது முறையாக தங்க பதக்கம் வென்றார்.

வெற்றி பெற்றார்

வெற்றி பெற்றார்

இதேபோல் இவரது சகோதரியான ரசிகாவும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். இவர்கள் இருவருமே அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது

தங்கம் பதக்கம் வென்றது குறித்து பேசிய ராகவி, இது மிகவும் மகிழ்ச்சியான தருணம் எனவும், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வெல்வதோடு, எதிர் காலத்தில் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே எனது லட்சியம் எனவும் கூறினார்.

மேலும் பதக்கம்

மேலும் பதக்கம்

அதே அகாடமியை சேர்ந்த கேப்டன் பாண்டியன், தேவராஜ், மனோஜ் ஆகியோர் 25 மீட்டர் 22 ஸ்டாண்ர்டு பிஸ்டல் மற்றும் 32 சென்டர் பையர் பிஸ்டல் குழு போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

Thala Ajith in AUTO | Chennaiயில் Autoவில் வலம்வரும் Thala | Valimai
அஜித் பாராட்டினார்

அஜித் பாராட்டினார்

தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்ற சகோதரிகளான ராகவி மற்றும் ரசிகாவை நடிகரும், துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவருமான அஜித் குமார் வெகுவாக பாராட்டி, மேலும் இதுபோன்ற பல பதக்கங்களை பெற வேண்டும் என வாழ்த்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X