செஞ்ச தப்புக்கு பிராயசித்தம் தேடும் அஜித்

By Siva

Recommended Video

நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லர் ஒரு பார்வை

சென்னை: அஜித் தான் செய்த தப்புக்கு பிராயசித்தம் தேடியுள்ளாராம்.

அஜித்தை வைத்து ஒரு தமிழ் படத்தை தயாரிக்க வேண்டும் என்று மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆசைப்பட்டார். இந்தியில் வெளியாகி ஹிட்டான பிங்க் படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என்று விரும்பியதும் ஸ்ரீதேவி தான்.

ஸ்ரீதேவி தனது விருப்பத்தை அஜித்திடம் கூற அவரும் உடனே சம்மதம் தெரிவித்தார். ஆனால் நேர்கொண்ட பார்வை பட வேலைகள் துவங்கும் முன்பு ஸ்ரீதேவி இறந்துவிட்டார்.

அஜித்

அஜித்

பிங்க் படத்தை ஹெச். வினோத் தான் ரீமேக் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் போனி கபூரிடம் பரிந்துரை செய்தவரே அஜித் தான். முன்னதாக அஜித் வினோத்தை சந்தித்து பிங்க் படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு வினோத்தோ, சார் நான் உங்களுக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் உள்ள கதை வைத்திருக்கிறேன் என்றாராம். அதை கேட்ட அஜித், நெகட்டிவ் கதாபாத்திரம் வேண்டாம் சார், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையான படங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தாராம்.

தயக்கம்

தயக்கம்

பிங்க் படத்தை ரீமேக் செய்ய வினோத் தயங்கியிருக்கிறார். அவரின் தயக்கத்தை புரிந்து கொண்ட அஜித், பெண்களுக்கு எதிரான குற்றங்களை பார்த்து அதிர்ச்சியாக உள்ளது, மேலும் சமூகத்தில் பெண்களை பற்றிய புரிதலும் சரியாக இல்லை. அதனால் தான் பிங்க் படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்கிறேன் என்றாராம்.

பெண்கள்

பெண்கள்

முன்பு நான் காதலிக்கிறேன் என்ற பெயரில் பெண்களை பின்தொடர்ந்து சென்று நடித்திருக்கிறேன். அது தவறு என்பது புரிந்துள்ளது. பிங்க் படத்தை ரீமேக் செய்து முன்பு செய்த தவறுகளை திருத்திக் கொள்ள விரும்புகிறேன் என்று அஜித் வினோத்திடம் தெரிவித்தாராம்.

மறுப்பு

மறுப்பு

பாதி மனதோடு வீட்டிற்கு சென்ற வினோத் மீண்டும் அஜித்தை சந்தித்தபோது, சார் இந்த படத்தை ஒரு பெண் இயக்குநரை வைத்து ரீமேக் செய்யலாமே, நான் ஏன் என்று கேட்டாராம். அதற்கு அஜித், இந்த படத்தை பெண் இயக்கினால் இயக்குநர் பெண் என்பதால் பெண்களுக்கு சாதகமாக பேசுகிறார் என்று மக்கள் கூறுவார்கள். அதனால் ஆண் தான் இயக்க வேண்டும் என்று அஜித் விளக்கினாராம். அஜித் இவ்வளவு தூரம் எடுத்துக் கூறிய பிறகே வினோத் பிங்க் படத்தை ரீமேக் செய்ய ஒப்புக் கொண்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X